டெட் தேர்வு | ஆசிரியர்களுக்கு விரைவில் குட் நியூஸ்! முதலமைச்சருடன் அமைச்சர் சந்திப்பு அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் அனைவரும் கட்டாயம் ஆசிரியர் தகுதித் தேர்வு (Teacher Eligibility Test) எழுதி தேர்ச்சி பெற வேண்டும் என உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு, தமிழ்நாடு அரசுப் பள்ளி ஆசிரியர்கள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இது தொடர்பாக ஜாக்டோ ஜியோ உள்ளிட்ட சங்கங்களுடன் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஆலோசனை நடத்தி அவர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்தார். அப்போது, ஆசிரியர்களின் பணி பாதுகாப்பு, டெட் தேர்வுகளில் (TET Exam) இருந்து முழுமையான விலக்கு உள்ளிட்ட கோரிக்கைகளை அரசுப் பள்ளி ஆசிரியர்களின் சங்க பிரதிநிதிகள் அமைச்சரிடம் வலியுறுத்தினர். அதன்பின்னர் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ், ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு அரசு முழு ஆதரவை கொடுக்கும் என்றும், ஆசிரியர்களின் பணி பாதுகாப்பை தமிழ்நாடு அரசு உறுதி செய்யும் என்றும் அவர் உறுதியளித்திருந்தார். அதன்படி, உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து தமிழ்நாடு அரசு சீராய்வு மனுவும் தாக்கல் செய்துள்ளது. இந்த சூழலில், ...