புதுச்சேரி, காரைக்கால், மாகி ஆரம்ப பள்ளி ஆசிரியர் பணிக்கு 15 முதல் விண்ணப்பிக்கலாம் அரசு ஆரம்ப பள்ளிகளில் காலியாக உள்ள 190 ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப பள்ளி கல்வித் துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. புதுச்சேரி, காரைக்கால், மாகி பிராந்தியங்களில் உள்ள அரசு ஆரம்ப பள்ளிகளில் காலியாக உள்ள பி.எஸ்.டி., ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் வரும் 15ம் தேதி காலை 10 மணி முதல் https://recruitment.py.gov.in என்ற ஆன்லைனில் வரவேற்கப்படுகின்றன. அடுத்த மாதம் 14ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களுடன் தேவையான சான்றிதழ்களை இணைத்து அடுத்த மாதம் 27ம் தேதி மாலை 5:00 மணிக்குள் பள்ளி கல்வித் துறை அலுவலகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும். புதுச்சேரி, காரைக்காலை பொருத்தவரை 181 ஆரம்ப பள்ளி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதில் பொது-72, எம்.பி.சி., - 32, எஸ்.சி.,-28, ஓ.பி.சி.,-20, இடபுள்யூ.எஸ்.,-3, முஸ்லீம்-4, பி.டி.,-2, எஸ்.டி.,-2 என்ற இட ஒதுக்கீடு அடிப்படையில் நிரப்பப்படுகிறது. மாற்றுத்திறனாளிகளுக்கு உள் ஒதுக்கீடாக 9 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ள...