Posts

Showing posts from September 19, 2025
Image
  TET தேர்வு வழக்கில் தீர்ப்புக்கு எதிராக ஆசிரியர் கூட்டமைப்பு விரைவில் உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு டெட் தேர்வு வழக்கு தீர்ப்பில் இந்த மாத இறுதிக்குள் உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் அகில இந்திய தலைவர் சி.கே.பாரதி, பொதுச்செயலாளர் சாவா ரவி, துணைத் தலைவர் அ.மயில், செயலாளர் அ.மாயவன், செயற்குழு உறுப்பினர் செ.நா.ஜனார்த்தனன் ஆகியோர் கூட்டாக நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: ஆசிரியர் தகுதித்தேர்வில் உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு குறித்தும், கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் பிரிவு 23-ஐ திருத்துவது குறித்தும் மறுஆய்வு மனு தாக்கல் செய்ய பிரதமர் மற்றும் மத்திய கல்வி அமைச்சரிடம் கோரிக்கை மனு சமர்ப்பி்க்கப்பட்டுள்ளது. மேலும், உச்சநீதிமன்றத்தில் கூட்டமைப்பு சார்பில் சீராய்வு மனு தாக்கல் செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. டெட் வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பினால் நாடு முழுவதும் 25 லட்சத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பாதிக்கப்படும் சூழ...
Image
  TET - ஆசிரியர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் அபாயம் - மறுபரிசீலனை செய்ய ராமதாஸ் கோரிக்கை பலவற்றை தெரிந்து கொள்ள வேண்டுமாயின் அவர்களும் போட்டித் தேர்வுக்கு தயாராவது போல தங்களின் நேரத்தையும், சிந்தனையையும் செலவழிக்க வேண்டும்.மாணவர்களுக்கு கல்வி கற்றுக் கொடுக்க வேண்டிய நேரத்தில் அவர்களும் மாணவர்களாக படிக்க வேண்டும் என்பது கற்பிக்கும் மனநிலையில் இருந்து மாறி மேலும் சிரமத்தை ஏற்படுத்தும். இது ஆசிரியர்களுக்கு மட்டுமல்ல, மாணவர்களுக்குமான கல்வியையும் பாதிக்கும். மறுபரிசீலனை செய்திடுக வாழ்நாளின் சரிபாதி காலத்தை பொருளாதார சிரமத்துடன் கழித்தவர்கள் ஆசிரியர் பணியில் சேர்ந்த பிறகு தான் ஓரளவுக்கு பொருளாதார மேம்பாடு அடைந்து, குடும்பத்தை பராமரித்து, பிள்ளைகளுக்கும் நல்ல கல்வியை கொடுப்பார்கள். ஓய்வு பெறுவதற்கு 10, 15 ஆண்டுகள் இருக்கின்ற நிலையில் அவர்களின் வேலையை பறிப்பது வாழ்வாதாரத்தை பறிப்பதாகும். அவர்கள் பிள்ளைகளின் உயர் படிப்பு, திருமணம் போன்றவை பாதிக்கப்படும்.  எனவே ஒன்றரை லட்சம் குடும்பங்களின் எதிர்காலம் கருதி இந்த தீர்ப்பினை நீதிமன்றம் மறுபரிசீலனை செய்ய வேண்டும். மாநில அரசும் ஆசிரியர்...
Image
  குரூப் 2, 2ஏ தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு! தமிழ் நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையமானது சமீபத்தில் உதவி ஆய்வாளர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், நன்னடத்தை அலுவலர், சார் பதிவாளர், வணிக வரித்துறை உதவியாளர் உள்ளிட்ட பணிகளுக்கு நடத்தப்படும் குரூப் 2, 2ஏ-க்கான முதல் நிலைத் தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட்டிருந்தது. மொத்தமாக 645 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான இந்த தேர்வானது வருகிற செப்டம்பர் 28ஆம் நாள் நடைபெற உள்ளது. இந்த நிலையில் இந்த குரூப் 2, 2ஏ தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கான ஹால் டிக்கெட்டுகள் இணைய தளத்தில் வெளியாகியுள்ளது. https://www.tnpsc.gov.in , https://www.tnpscexams.in இணைய தளத்தில் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என டி.என்.பி.எஸ்.சி. அறிவித்துள்ளது.