டிஎன்பிஎஸ்சி குரூப் 5ஏ தேர்வு அறிவிப்பு! யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? டிஎன்பிஎஸ்சி குரூப் 5 ஏ தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. உதவி பிரிவு அலுவலர், உதவியாளர் என மொத்தம் 32 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்க முடியும், எப்படி விண்ணப்பிப்பது என்பது உள்ளிட்டவற்றை இங்கு விரிவாக பார்க்கலாம். குரூப் 5 ஏ தேர்வுக்கான அறிவிப்பினை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு இன்று முதல் நவம்பர் 5 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். எழுத்து தேர்வு வரும் 21.12.2025 அன்று நடைபெற உள்ளது. மொத்தம் 32 காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கான விரிவான விவரங்களை பார்க்கலாம். பணியிடங்கள் விவரம் உதவி பிரிவு அலுவலர்: 22, உதவி பிரிவு அலுவலர் (நிதி): 03 உதவியாளர் (தலைமை செயலகம்): 5 உதவியாளர் (நிதி): 2 என மொத்தம் 32 காலிப்பணியிடங்கள் உள்ளன. வயது வரம்பு: 01.07.2025 தேதிப்படி அதிகபட்ச வயது வரம்பு 35 ஆகும். ஆதி திராவிடர், ஆதி திராவிடர் (அருந்ததியர்) பட்டியல் பழங்குடியின உள்ளிட்ட பிரிவினருக்கு 5 ஆண்டுகள் வயது வரம்பில் சலுகை உண்டு. கல்வி...