Posts

Showing posts from October 25, 2025
Image
  இலவச கட்டாய கல்வி.! வரும் 31-ம் தேதி மாணவர்கள் குலுக்கல் முறையில் தேர்வு.! நடப்பாண்டு இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி (ஆர்டிஇ) சேர்க்கைக்கு 82,016 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். இதற்கான குலுக்கல் தேர்வு முறை அக்டோபர் 31-ம் தேதி நடைபெறும் என பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது. இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடங்களில் ஏழைக் குழந்தைகள் சேர்க்கப்படுவார்கள். இதன்படி, தமிழகத்தில் இதுவரை 5 லட்சம் குழந்தைகள் தனியார் பள்ளிகளில் படிக்கின்றனர். இந்த திட்டத்துக்கான நிதியை மத்திய அரசு வழங்காததால், 2025-26-ம் கல்வியாண்டுக்கானமாணவர் சேர்க்கையை பள்ளிக்கல்வித் துறை நிறுத்தி வைத்திருந்தது. இதுகுறித்த வழக்கில் உயர் நீதிமன்றமும் உச்ச நீதிமன்றமும் அறிவுறுத்தியதை யடுத்து மத்திய அரசு நிதியை விடுவித்தது. இதையடுத்து பள்ளிகளில் ஏற்கெனவே சேர்க்கப்பட்ட மாணவர்களில் தகுதியானவர்களை ஆர்டிஇ ஒதுக்கீட்டில் பதிவு செய்ய வேண்டுமென அறிவுறுத்தப்பட்டது. அதன்படி, மாநிலம் முழுவதும் உள்ள 7,717 பள்ளிகளில் எல்கேஜிவகுப்பில் 81,927 குழந்தைகளும், ஒன்றாம் வகுப்பில் சேர 89 பேர...
Image
  முன்கூட்டியே வரும் பொதுத்தேர்வுகள்? சட்டமன்ற தேர்தலை ஒட்டி முடிவு? பொதுத்தேர்வு தேதி நவம்பர் 4 ஆம் அறிவிப்பு - கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் தமிழகத்தில் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், மாணவர்களின் நலன் கருதி 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளை மார்ச் மாத இறுதிக்குள் நடத்தி முடிக்க பள்ளி கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ மற்றும் விரிவான தேர்வு அட்டவணை, வரும் நவம்பர் 4ம் தேதி வெளியிடப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்துள்ளார்.   தேர்வுகளை முன்கூட்டியே நடத்த காரணம் என்ன? தமிழகத்தில் திமுக அரசின் ஐந்தாவது ஆண்டு நடைபெற்று வருவதால், அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. வழக்கமாக, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மார்ச் மாதத்திலும், 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மார்ச் மாத இறுதியில் தொடங்கி ஏப்ரல் மாதத்திலும் நடைபெறும். ஆனால், சட்டமன்ற தேர்தல் நடைபெறும் காலங்களில், வாக்குப்பதிவு, வாக்கு எண்ணிக்கை போன்ற முக்கி...
Image
  10, 12 பொதுத் தேர்வுக்கான கால அட்டவணை நவ.4ல் வெளியீடு ? தமிழகத்தில் 10, பிளஸ் 2 வகுப்புகளுக்கான பொதுத் தேர்வுகால அட்டவணை அக்டோபரில் வெளியாகும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தயாரிப்புப் பணிகளில் தாமதம் ஏற்பட்டதால் பொதுத்தேர்வுக்கான அட்டவணை வரும் நவம்பர் முதல் வாரத்தில் வெளியாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது குறித்து தேர்வுத்துறை அதிகாரிகள் கூறும்கையில், ''அட்டவணை தயாரிப்பு பணிகள் முடிந்து அரசின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அனுமதி கிடைத்ததும், நவ.4ல் வெளியிட திட்டமிட்டுள்ளோம். அடுத்தாண்டு நடைபெறும் தேர்தலை கருத்தில் கொண்டு தேர்வு தேதிகள் தயாரிக்கப்பட்டுள்ளன" என்றனர்