Posts

Showing posts from September 21, 2025
Image
  கல்வி நிதி ஒதுக்காதது ஏன்? தமிழக அரசுடன் கொள்கை பிரச்னை: ஒன்றிய அமைச்சர் ஒப்புதல் தென்காசி அருகே மத்தளம் பாறை ஜோஹோ தகவல் தொழில்நுட்ப நிறுவனத்திற்கு நேற்று வந்த ஒன்றிய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், அங்கு பணிபுரியும் ஊழியர்களுடன் கலந்துரையாடினார். பின்னர் அவர் அளித்த பேட்டியில், தேசிய கல்விக் கொள்கை புதிய வகையான கல்வி‌ திறன் அடிப்படையிலான கல்வி, செயல்திறன் அடிப்படையிலான கல்வி‌. மற்றும் திறமை அடிப்படையிலான கல்வியை பரிந்துரைக்கிறது. இதனை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.2047க்குள் இந்தியா ஒரு மேம்பட்ட தேசமாக உருவாகுவதற்காக நாம் புதிய மாதிரியை உருவாக்க வேண்டும் என்றார். கல்வி நிதி ஒதுக்குதல் தொடர்பான கேள்விக்கு, ஒன்றிய அரசு பல்வேறு மாநில அரசுகளுடன் மிகவும் ஒத்துழைப்பாக செயல்படுகிறது. அது தமிழ்நாடு ஆனாலும் அல்லது வேறு எந்த மாநில அரசாக இருந்தாலும் அரசியலமைப்பின் விதிகளுக்குட்பட்டு செயல்பட வேண்டும். கொள்கைகளின் அடிப்படையில் முன்னேற வேண்டும். தமிழ்நாடு சில துறைகளில் எங்களுடன் இணைந்து செயல்படுகிறது. சில கொள்கை அமல்படுத்தல் பகுதிகளில், அவர்களுக்கு சில பிரச்னைகள் உள்ளன. எனினும், ஒன்றிய ...
Image
  கிராம உதவியாளா் பணிக்கான வயது வரம்பு: ஆட்சியா்களுக்கு தமிழக அரசு அறிவுறுத்தல்! தமிழகத்தில் நியமிக்கப்படவுள்ள கிராம உதவியாளா்களுக்கான வயது வரம்பு தொடா்பாக, மாவட்ட ஆட்சியா்களுக்கு தமிழக அரசு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது. வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை மூலமாக கிராம உதவியாளா்கள் நியமிக்கப்படவுள்ளனா். இதற்கான விண்ணப்ப நடைமுறைகள், ஒவ்வொரு மாவட்டத்திலும் தொடங்கப்பட்டுள்ளன. மாவட்ட ஆட்சியா்கள் தலைமையில் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், கிராம உதவியாளா்களை நியமிப்பதற்கான வயது நிலைகள் குறித்த விவரங்களை வருவாய் நிா்வாக ஆணையரகம் மற்றும் அனைத்து மாவட்ட ஆட்சியா்களுக்கும் வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை அனுப்பி வைத்துள்ளது. இதுகுறித்து, துறையின் கூடுதல் தலைமைச் செயலா் பெ.அமுதா அனுப்பியுள்ள கடித விவரம்: வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறையில் நேரடி நியமனம் மூலமாக கிராம உதவியாளா்கள் பணியமா்த்தப்பட உள்ளனா். அவா்களுக்கான வயது வரம்பு நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, பொதுப் பிரிவினருக்கான அதிகபட்ச வயது வரம்பு 32 ஆகவும், பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்...
Image
  தமிழ்நாடு மின்சார வாரிய வேலை வாய்ப்பு; 1794 பணியிடங்கள்; விண்ணப்பிக்க கடைசி தேதி: 02.10.2025 தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வில் அடங்கிய தொழிற்பயிற்சி நிலை பதவிகளை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்தில் 1794 கள உதவியாளர் (Field Assistant) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 02.10.2025க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள். கள உதவியாளர் காலியிடங்களின் எண்ணிக்கை: 1794 கல்வித் தகுதி: எலக்ட்ரீசியன் (Electrician) அல்லது ஒயர்மேன் (Wireman) அல்லது எலக்ட்ரிக்கல் (Electrical) பிரிவில் ஐ.டி.ஐ படித்திருக்க வேண்டும். சம்பளம்: ரூ. 18,800 - 59,900 வயதுத் தகுதி: 01.07.2025 அன்று 32 வயதிற்குள் இருக்க வேண்டும். எம்.பி.சி (MBC-DNC), பி.சி (BC), பி.சி.எம் (BCM) பிரிவினர் 34 வயது வரையிலும், எஸ்.சி (SC), எஸ்.சி.ஏ (SC(A)), எஸ்.டி (ST) பிரிவினர் 37 வயது வரையிலும் விண்ணப்பிக்கலாம். தேர்வு முறை: இந்த பணியிடங்களுக்கு எழுத்...