சிபிஎஸ்இ 10 , 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தேதிகள் வெளியீடு ஒவ்வொரு ஆண்டும் சிபிஎஸ்இ கீழ் 10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படுகிறது. இந்தாண்டு முதல் 10-ம் வகுப்பிற்கு இரண்டு பொதுத்தேர்வு நடைபெற உள்ளது. 10-ம் வகுப்பிற்கு துணைத்தேர்வு கிடையாது. 12-ம் வகுப்பிற்கு வழக்கம் போல் பொதுத்தேர்வு மற்றும் துணைத் தேர்வு நடைபெற உள்ளது. மேலும் 12-ம் வகுப்பு விளையாட்டு வீரர்களுக்கு தனித்தேர்வு நடைபெறும். தேர்விற்கு மாணவர்கள் திட்டமிட்டு தயாராகும் வகையில், ஆசிரியர்கள் பாடங்களை விரைவாக முடித்து தேர்விற்கு மாணவர்களை தயார்படுத்தும் வகையில் இந்தாண்டு உத்தேச அட்டவணை வெளியிடப்படுவதாக சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது. இந்தாண்டு பொதுத்தேர்வை இந்தியா மட்டுமின்றி 26 நாடுகளில் இருந்து சுமார் 44 லட்சம் மாணவர்கள் எழுதுவார்கள் என கணக்கிடப்பட்டுள்ளது. மொத்தம் 204 பாடங்களுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படுகிறது. 10-ம் வகுப்பிற்கு முதல் பொதுத்தேர்வு 2026 பிப்ரவரி 17 முதல் தொடங்கி மார்ச் 9- வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. 12-ம் வகுப்பிற்கு பொதுத்தேர்வு 2026 பிப்ரவரி 17 முதல் தொடங்கி ஏப்ரல் 9 வரை நடத்த திட்டமிட...