நடிகர் சூர்யாவின் அகரம் அறக்கட்டளையில் விண்ணப்பிப்பது எப்படி? கடந்த இரண்டு மூன்று தினங்களாக செய்தி ஊடகங்களை கலக்கி கொண்டு இருப்பவர் நடிகர் சூர்யா. பிரபலமான இந்த நடிகரின் சினிமா பிரபலத்துக்காக அல்ல; இவர் சமூகத்திற்குச் செய்யும் தன்னிகரில்லா சேவை தான் காரணம். இவரது தொண்டு நிறுவனமான அகரம் அறக்கட்டளை இதுவரை சுமார் 7000 மாணவர்கள் படிக்க வைத்துள்ளது. இந்த அறக்கட்டளையில் விண்ணப்பிப்பது எப்படி என்று காணலாம். சூர்யாவின் ‘அகரம் அறக்கட்டளை’யில் கல்வி உதவித்தொகை பெறுவது எப்படி? கலை மற்றும் அறிவியல் அல்லது டிப்ளமோ படிக்க, ஒரு மாணவருக்கு 3 ஆண்டுகளுக்கு ரூ 2.5 லட்சத்தையும், மருத்துவம் அல்லது பொறியியல் படிக்க 4 ஆண்டுகள் முதல் 5.5 ஆண்டுகள் வரை ரூ 4.50 லட்சத்தை அறக்கட்டளை ஏற்கிறது. அகரம் அறக்கட்டளையில் சேர யாரெல்லாம் விண்ணப்பிக்க முடியும், அவர்களுக்கு என்னென்ன தகுதிகள் இருக்க வேண்டும் என்பதை பார்க்கலாம். தமிழகத்தில் ஊரக பகுதியில் உள்ள அரசு பள்ளியில் படிப்பவர் மட்டுமே விண்ணப்பிக்கலாம். நடப்பு கல்வி ஆண்டில் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதுபவராக இருத்தல் வேண்டும். தமிழகத்தை சேர்ந்தவர்கள் மட்டுமே விண...