டிஎன்பிஎஸ்சி 2026.. குரூப் தேர்வுகள் கால அட்டவணை எப்போது? விரைவில் வெளியாகும் முக்கிய அறிவிப்பு குரூப் 1, குரூப் 2, 2ஏ, குரூப் 4 என பல்வேறு நிலைகளில் உள்ள பணியிடங்களை டிஎன்பிஎஸ்சி நிரப்பி வருகிறது. தேர்வர்கள் தேர்வுகளுக்கு முன்கூட்டியே தயாராகும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் அதற்கு முந்தைய ஆண்டிலேயே என்னென்ன தேர்வுகள் எப்போது நடைபெறும் என்பதை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் 2026 ஆம் ஆண்டுக்கான டிஎன்பிஎஸ்சி ஆண்டு தேர்வு அட்டவணை விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அரசு பணிகளுக்கு தேர்வாகி வரும் பல லட்சக்கணக்கான தேர்வர்களுக்கு கலங்கரை விளக்கமாக இருப்பது டிஎன்பிஎஸ்சிதான். நன்றாக படித்து போட்டித்தேர்வில் வெற்றி பெற்றால் போதும். வேலை நிச்சயம்.. 10 பைசா பணம் தர தேவையில்லை. டிஎன்பிஎஸ்சி ஆண்டு தேர்வு அட்டவணை படித்து வெற்றி பெற்றால் அரசு வேலை 100 சதவீதம் உறுதி என்பதால், கிராமப்புற ஏழை எளிய தேர்வர்களுக்கு அரசு வேலை கிடைக்கும் வாய்ப்பை உறுதி செய்வது தமிழக அரசு பணியாளர் தேர்வு ஆணையம் எனப்படும் டிஎன்பிஎஸ்சிதான். டிஎன்பிஎஸ்சியை பொறுத்தவரை குரூப் 1, குரூப் 2, 2ஏ, குரூப் 4 என பல்வேறு நில...