முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு திட்டமிட்டபடி அக். 12-ல் நடைபெறும்- ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டமிட்டபடி அக்டோபர் 12-ம் தேதி முதுகலை பட்டதாரி தேர்வு நடைபெறும் என ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிகளில் 1,996 முதுகலை பட்டதாரி ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர் (கிரேடு-1), கணினி பயிற்றுநர் (கிரேடு-1) காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிக்கையை ஆசிரியர் வாரியம் ஜூலை 10-ம் தேதி அன்று வெளியிட்டு அதற்கான ஆன்லைன் விண்ணப்பங்களை ஜூலை 10 முதல் ஆகஸ்ட் 12 வரைபெற்றுக்கொண்டது. எழுத்துத்தேர்வு அக். 12-ம் தேதி நடைபெறும் என அறிவித்தது. இந்நிலையில், இந்த ஆண்டு கல்வி உளவியல் மற்றும் பொது அறிவு பாடத்திட்டம் மாற்றியமைக்கப்பட்டிருப்பதால் அப்பாடங்களுக்கு தயாராகும் வகையில் தேர்வை 3 வாரம் தள்ளிவைக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதிகள், முதுகலை ஆசிரியர் தேர்வை தள்ளிவைப்பது குறித்து ஆசிரியர் தேர்வு வாரியம் பரிசீலிக்கலாம் என அறிவுறுத்தினர். இதைத்தொடர்...