தகுதித்தேர்வை உடனடியாக ரத்து செய்து வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு மூப்பின் அடிப்படையில் வழங்க வேண்டும்.

7 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தி நவ.,22ம் தேதி ஆசிரியர்கள் பேரணி

First Published : 06 November 2012 02:35 PM IST
மத்திய அரசின் இடைநிலை ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தை போல அனைத்து ஆசிரியர்களுக்கும் வழங்க வேண்டுமென்று நவ.,22ம் ஆசிரியர்கள் பேரணி நடத்தவுள்ளனர்.
இதுகுறித்து தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில துணைத்தலைவர் கூறியதாவது: 6வது ஊதியக்குழுவில் அறிவிக்கப்பட்டுள்ள அனைத்து சலுகைகளையும் தமிழகம் முழுவதும் உள்ள ஆசிரியர்களுக்கு அதே தேதியில் வழங்க வேண்டும். ஆசிரியர் தகுதித்தேர்வை உடனடியாக ரத்து செய்து வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு மூப்பின் அடிப்படையில் வழங்க வேண்டும். 
தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் பணிக்கலாத்தை கணக்கிட்டு தேர்வு நிலை மற்றும் சிறப்பு நிலை வழங்க வேண்டும். தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அரசாணையின்படி ஊதியம் நிர்ணயம் செய்ய வேண்டும். இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்களுக்கு தொகுப்பூதிய காலத்தை நியமன நாள் முதல் கணக்கிட்டு பணிவரன் வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை தொடர்ந்து அரசிடம் வலியுறுத்தி வருகின்றோம். எனவே தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் நவம்பர் 22ம் தேதியன்று ஆசிரியர்கள் பேரணி நடத்த உள்ளனர் என்று அவர் கூறியுள்ளார். 

ஆதிதிராவிடர் பள்ளி ஆசிரியர் பணியிடங்கள்: சென்னையில் கலந்தாய்வு

சென்னை:ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை பள்ளிகளுக்கு, ஆசிரியர் தேர்வாணையத்தின் மூலம் தேர்ந்தெடுக்கப் பட்டவர்களுக்கு, இம்மாதம், 15ம் தேதி, சென்னையில் கலந்தாய்வு கூட்டம் நடக்கிறது.கடந்த, 2010-11ம் ஆண்டில், ஆதிதிராவிடர் நலப் பள்ளிகளில், காலியாக உள்ள பட்டதாரி காலி பணியிடங்களை நிரப்புவதற்கு, ஆசிரியர் தேர்வாணையத்தின் மூலம், தேர்வு நடத்தப்பட்டது. இதில், தேர்வானவர்களுக்கு, இம்மாதம், 15ம் தேதி, சென்னை, சேப்பாக்கத்தில் உள்ள ஆதிதிராவிடர் நல ஆணையர் அலுவலகத்தில், கலந்தாய்வு கூட்டம் நடக்கும் என, அரசு அறிவித்துள்ளது. மேலும், தேர்வானவர்கள், உரிய சான்றுகளுடன் வர வேண்டும் என, தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Comments

Popular posts from this blog