குறை சொல்ல முடியாத தேர்வு: அமைச்சர் என்.ஆர்.சிவபதி
தயவு செய்து உங்களது கருத்துக்களை பதிவு செய்யுங்கள்!!!உங்களது கருத்துக்கள் யாருடைய மனதையும் புண்படுத்தாத படி தகுதியானதாக இருக்கட்டும் !!!
ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் நடத்தப்பட்ட தேர்வு யாரும் விரல் நீட்டி குறை காட்ட முடியாத தேர்வு எனஅமைச்சர் என்.ஆர்.சிவபதி பெருமிதத்துடன் தெரிவித்தார்.
சென்னையில் வியாழக்கிழமை நடைபெற்ற ஆசிரியர்களுக்கான பணிநியமன உத்தரவுகளை வழங்கும் விழாவில் அவர் ஆற்றிய முன்னிலை உரை:
அதிமுக ஆட்சிப் பொறுப்பேற்றவுடன், ஒன்றரை ஆண்டுகளுக்குள் 59 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் என முதல்வர் அறிவித்தார். இப்போது, 20 ஆயிரத்து 920 ஆசிரியர்களை
நியமித்துள்ளோம். ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நடத்தப்பட்ட இந்தத் தேர்வு யாரும் விரல் நீட்டி சுட்டிக் காட்டி குறை சொல்ல முடியாதபடி நடைபெற்ற தேர்வாகும். ஒரே நேரத்தில் 20 ஆயிரத்து 920 பேருக்கு பணியிடங்களுக்கான உத்தரவுகள் வழங்கப்பட்டுள்ளன. ஆசிரியர்கள் நலன் காக்கும் நல்ல ஆட்சியில் அறப்பணியை மேற்கொள்ள நீங்கள் அதிர்ஷ்டசாலிகள் என்றார் அமைச்சர் சிவபதி. மாவட்ட வாரிய அமைச்சர்கள்: தகுதித் தேர்வு மூலம், தமிழகத்தில் 32 மாவட்டங்களிலும் தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்கள் அவர்களுடைய மாவட்ட வாரியாக அமர வைக்கப்பட்டு இருந்தனர். முதல்வரின்தொகுதியான ஸ்ரீரங்கம் தொகுதி அடங்கிவரும் மாவட்டமும், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் என்.ஆர்.சிவபதியின் சொந்த மாவட்டமுமான திருச்சியைச் சேர்ந்தவர்களும் முதல் வரிசையில் அமர வைக்கப்பட்டிருந்தனர். பள்ளிக் கல்வித் துறையைச் சேர்ந்த இயக்குநர்கள் அனைவரும் ஒரே நிறத்தில் சட்டை, பேண்ட் அணிந்திருந்தனர். ஒவ்வொரு மாவட்டங்களில் இருந்தும் வந்திருந்தவர்களுக்கு அவர்களின் இருக்கைகளுக்குச் சென்று அந்த மாவட்டங்களைச் சேர்ந்த அமைச்சர்கள்,முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் பணிநியமன உத்தரவுகளை வழங்கினர்.
உத்தரவுகளைப் பெற்றவர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. மேலும், அவர்கள்பஸ்களில் பத்திரமாக அனுப்பி வைக்கப்பட்டனர். குறுகிய காலத்தில் மிகச் சிறப்பாக ஏற்பாடுகளைச் செய்தமைக்காக பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகளுக்கு புதிய ஆசிரியர்கள் பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்தனர்.
பணிநிரந்தரம் செய்ய வலியுறுத்தி பகுதிநேர ஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டம் பணிநிரந்தம் செய்ய வலியுறுத்தி பகுதிநேர ஆசிரியர்கள் சென்னையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறையை சமாளிக்க பகுதிநேர ஆசிரியர்கள் 2012-ம் ஆண்டு முதல் தொகுப்பூதியத்தில் பணிநியமனம் செய்யப்படுகின்றனர். அதன்படி தற்போது 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பகுதிநேர ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் பள்ளிகளில் வாரந்தோறும் 3 நாட்கள் பாடம் நடத்துவர். அதற்கு மாதந்தோறும் ரூ.12,500 சம்பளமாக தரப்படுகிறது. இந்நிலையில் பணிநிரந்தரம் செய்யக் கோரி நீண்டகாலமாக அவர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக பகுதி நேர ஆசிரியர்கள் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி சென்னையில் நேற்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஈடுபட்ட நிர்வாகிகள் சிலரை பள்ளிக்கல்வித் துறை உயரதிகாரிகளிடம் பேச போலீஸார் அழைத்துச் சென்றனர். அதில் உடன்பாடு எட்டப்படவில்லை. இதுதொடர்பாக பகுதிநேர ஆசிரியர் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு நிர்வாகி கவுதமன் கூறும்போது, ''கோரிக்கையை நிறைவேற்ற...
Comments
Post a Comment