முதுகலை ஆசிரியர் கலந்தாய்வு: 70% பேருக்கு சொந்த மாவட்டத்தில் பணி  

சென்னை: புதிதாக தேர்வு பெற்ற, முதுகலைஆசிரியர்களுக்கான பணி நியமன கலந்தாய்வு, ஆன்-லைன் வழியில், 32 மாவட்டங்களிலும், நேற்று நடந்தது. 2,273 பேரில், 70.39 சதவீதம் பேர், அவரவர் சொந்த மாவட்டங்களில், பணி நியமனஉத்தரவுகளை பெற்றனர். 

போட்டித் தேர்வில் தேர்வு பெற்ற முதுகலை ஆசிரியர்களுக்கு , கடந்த மாதம் , 13 ம் தேதி , சென்னையில் நடந்த விழாவில் , தேர்வு பெற்றதற்கான உத்தரவுகள் வழங்கப்பட்டன . இதைத் தொடர்ந்து , பணி நியமன கலந்தாய்வு , 32 மாவட்டங்களிலும் , நேற்று நடந்தது . 2,895 பணியிடங்களை நிரப்ப தேர்வு நடத்திய போதும் , 2,273 பணியிடங்கள் மட்டும் , நேற்று நிரப்பப்பட்டன . மாவட்டத்திற்குள் பணி நியமனம் பெறுவதற்கான கலந்தாய்வு , காலையிலும் ; வெளி மாவட்டங்களில் பணி நியமனம் பெறுவதற்கான கலந்தாய்வு , பிற்பகலிலும் நடந்தன . மொத்த தேர்வர்களில் , 1,600 பேர் , அவரவர் சொந்த மாவட்டங்களில் , பணி நியமன உத்தரவுகளை பெற்றனர் . 

மீதமிருந்த , 673 பேர் மட்டும் , சொந்த மாவட்டங்களில் விரும்பிய இடங்கள் கிடைக்காததால் , வெளி மாவட்டங்களில் உள்ள பணியிடங்களை தேர்வு செய்தனர் . சென்னை மாவட்டத்தில் இருந்து , 50 பேர் தேர்வு பெற்றிருந்தனர் . ஆனால் , 18 இடங்கள் மட்டுமே காலியாக இருந்தன . இதனால் , 32 பேர் , காஞ்சிபுரம் , திருவள்ளூர் மாவட்டங்களில் இருந்த காலி பணியிடங்களை , தேர்வு செய்தனர் . பணி நியமன உத்தரவுகளை பெற்ற அனைவரும் , நாளை பணியில் சேர வேண்டும் என கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது

Comments

Popular posts from this blog