டி.என்.பி.எஸ்.சி., தலைவர் பதவியை பிடிக்க கடும் போட்டி:

மார்ச்சில் நடராஜ் ஓய்வு டி.என்.பி.எஸ்.சி., தலைவர் நடராஜ் பதவிக்காலம், மார்ச்சில் முடிவதை அடுத்து, இந்தப் பதவியை பிடிக்க, இப்போதே பணியில் இருக்கும் அதிகாரிகள் மற்றும் ஓய்வு பெற்ற அதிகாரிகளிடை@ய, கடும் போட்டி எழுந்துள்ளது. ஓய்வு பெற்ற, ஐ.பி.எஸ்., அதிகாரி யான நடராஜ், டி.என்.பி.எஸ்.சி., தலைவராக, கடந்த ஆண்டு, ஜனவரி, 23ம் தேதி பதவி ஏற்றார். இவர் பதவி ஏற்றதில் இருந்து, தேர்வாணையத்தில், பல்வேறு சீர்திருத்தங்களை கொண்டு வந்தார்

.இணையதளம் வழியாக பதிவு, "ஹால் டிக்கெட்' வினியோகம், தேர்வு நடவடிக்கைகள் மற்றும் நேர்முகத்தேர்வு ஆகியவை, வீடியோ மூலம் பதிவு, தேர்வு முடிந்ததும், உடனடியாக முடிவை வெளியிட்டு, கலந்தாய்வு முறை அறிமுகம், குறிப்பிட்ட தேர்வுகளை, கம்ப்யூட்டர்வழியாக நடத்துவது என, தேர்வாணைய நடவடிக்கைகள் அனைத்திலும், வெளிப்படையான நிர்வாகத்தை கொண்டு வந்தார்.இதனால், முந்தைய நிர்வாகத்தினரால் ஏற்பட்டிருந்த களங்கத்தை துடைத்து, லட்சக்கணக்கான பட்டதாரிகள் மத்தியில், மீண்டும் தேர்வாணையத்தின் மீது, நம்பகத்தன்மையை ஏற்படுத்தினார்.

 தலைவர் மற்றும் உறுப்பினர்பதவிகளில் இருப்பவர்கள், 6ஆண்டுகள் அல்லது 62 வயது, இதில் எது முதலில் வருகிறதோ, அதுவரை, பதவி வகிக்க லாம். அதன்படி, நடராஜுக்கு, 62 வயது முடிவடைவதால், அவருடையபதவிக் காலம், மார்ச் இரண்டாவது வாரத்துடன் முடிகிறது.இதையடுத்து, தலைவர் பதவியை பிடிக்க, ஓய்வு பெற்ற மற்றும் பணியில்உள்ள, ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., அதிகாரிகள் மத்தியில், இப்போதே கடும் போட்டி எழுந்துள்ளதாக, துறை வட்டாரங்கள் கூறுகின்றன

.பணியில் உள்ள அதிகாரியைக்கூட, தேர்வாணைய தலைவராக நியமிக்க, சட்டத்தில் வழிவகை உள்ளது.எனவே, பணியில் உள்ள ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் பலர், தேர்வாணைய பதவியை குறி வைத்து உள்ளனர். யாரைப் பிடித்தால்,காரியம் கச்சிதமாக முடியும் என, ஆளாளுக்கு, பல்வேறு வழிகளில், முயற்சியில் இறங்கியுள்ளதாக, துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.மேலும், டி.என்.பி.எஸ்.சி.,யின் நான்கு உறுப்பினர்களின் பதவிக் காலம், ஜூன், ஜூலை ஆகிய மாதங்களில், அடுத்தடுத்து முடிவுக்கு வருகின்றன. இதனால், உறுப்பினர்கள் பதவிக்கும், இப்போதே போட்டி துவங்கி உள்ளது. 

சம்பளமாக கணிசமான தொகை, கார் மற்றும் பல்வேறு வசதிகள், ஒரு பக்கம் இருந்தாலும், சமுதாயத்தில் மிகுந்த மரியாதைக்கு உரிய பதவி என்பதால், இந்தப் பதவிகளை பெரிதும் விரும்புகின்றனர். - நமது நிருபர் -

Comments

Popular posts from this blog