முதல்வரிடம் பணி நியமன ஆணை பெற்றும் கலந்தாய்வில் பெயர் இல்லை : ஆசிரியை கதறல்-Dinakaran
01 Jan 2013 05:00,
நெல்லை: ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு சென்னையில் கடந்த 13ம்தேதி முதல்வர் ஜெயலலிதா பணி நியமன ஆணைகளை வழங்கினார்.இதில் நெல்லை மாவட்டத்தில் வணிகவியல் பாட ஆசிரியர் பணியிடத்திற்கு தென்காசியை சேர்ந்த அருண் ஷோபனாவும் உத்தரவு கடிதம் பெற்றார்.
இந்நிலையில், நேற்று நடந்த ஆன்லைன் கலந்தாய்வில் அவரது பெயர் பட்டியலில் இல்லை. இதற்கானஅழைப்பும் அவருக்கு வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் நெல்லை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அலுவலகத்தில் நடந்த கலந்தாய்வில், சிஇஓவிடம் புகார் செய்தார். இது தொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரிய அலுவலகத்தில் விசாரிக்குமாறு அறிவுறுத்தப்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த அருண் ஷோபனா கதறி அழுதார். இதற்கிடையே பாதிக்கப்பட்ட ஆசிரியை அருண் ஷோபனாவின் உறவினர்கள் சென்னை டிஆர்பி அலுவலகத்தை தொடர்பு கொண்டு விவரம் கேட்டனர். அதற்கு, உடனடியாக எதுவும் செய்ய முடியாது. ஆய்வு செய்து ஒரு வாரத்திற்குள் பணி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததாக பதிலளித்தனர். இதையடுத்து அவர் சிஇஓ அலுவலகத்தில் இருந்து கண்ணீருடன் புறப்பட்டு ஊருக்குச் சென்றார்.
பணிநிரந்தரம் செய்ய வலியுறுத்தி பகுதிநேர ஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டம் பணிநிரந்தம் செய்ய வலியுறுத்தி பகுதிநேர ஆசிரியர்கள் சென்னையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறையை சமாளிக்க பகுதிநேர ஆசிரியர்கள் 2012-ம் ஆண்டு முதல் தொகுப்பூதியத்தில் பணிநியமனம் செய்யப்படுகின்றனர். அதன்படி தற்போது 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பகுதிநேர ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் பள்ளிகளில் வாரந்தோறும் 3 நாட்கள் பாடம் நடத்துவர். அதற்கு மாதந்தோறும் ரூ.12,500 சம்பளமாக தரப்படுகிறது. இந்நிலையில் பணிநிரந்தரம் செய்யக் கோரி நீண்டகாலமாக அவர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக பகுதி நேர ஆசிரியர்கள் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி சென்னையில் நேற்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஈடுபட்ட நிர்வாகிகள் சிலரை பள்ளிக்கல்வித் துறை உயரதிகாரிகளிடம் பேச போலீஸார் அழைத்துச் சென்றனர். அதில் உடன்பாடு எட்டப்படவில்லை. இதுதொடர்பாக பகுதிநேர ஆசிரியர் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு நிர்வாகி கவுதமன் கூறும்போது, ''கோரிக்கையை நிறைவேற்ற...
Comments
Post a Comment