முதுகலை தாவரவியல் ஆசிரியர் மற்றும் தமிழ் வழி ஒதுக்கீட்டு இடங்களுக்கான தேர்வு முடிவுகளை உடன் வெளியிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேர்வர்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

தமிழ் வழி ஒதுக்கீட்டு இடங்கள்மற்றும் தாவரவியல் பாடத்திற்கான, முதுகலை ஆசிரியர் பட்டியல் வெளியாவதில் தொடர்ந்து இழுபறி ஏற்பட்டுள்ளது. போட்டித் தேர்வு அடிப்படையில் தேர்வு பெற்ற முதுகலை ஆசிரியர் 2,300 பேர், கடந்த டிசம்பரில் பணி நியமன உத்தரவுகளை பெற்றனர். இவர்கள் பணியில் சேர்ந்து இரண்டு மாதம் சம்பளமும் பெற்றுவிட்டனர். 

ஆனால் இவர்களுடன் தேர்வெழுதிய தாவரவியல் பாட தேர்வர்களுக்கு, இதுவரை இறுதிப்பட்டியல் வெளியிடப்படவில்லை. தவறுதலான கேள்விகள் விவகாரம் தொடர்பாக, சென்னை, ஐகோர்ட் உத்தரவின்படி, விடைத்தாள்களை மீண்டும் ஒருமுறை ஆய்வு செய்து , இறுதிப் பட்டியல் தயாரிக்கும் பணியும் முடிந்துள்ள நிலையில், முடிவு வெளியாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால் தேர்வு எழுதியோர் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். 

தாவரவியல் பாடம் மற்றும் தமிழ் வழி ஒதுக்கீட்டு இடங்களுக்கான முடிவுகளை உடன் வெளியிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆசிரியர்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

Comments

Popular posts from this blog