3 நபர் குழு அறிக்கையை வெளியிட வேண்டும் நெல்லையில் 15ம் தேதி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் 

திருநெல்வேலி:பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் நெல்லையில் வரும் 15ம் தேதி ஆர்ப்பாட்டம் நடக்கிறது.தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயற்குழு கூட்டம் பாளையில் நடந்தது. மாவட்ட தலைவர் ராஜ்குமார் தலைமை வகித்தார். செயலாளர் சுடலைமணி வரவேற்றார். மாநில செயலாளர்கள் முருகேசன், மணிமேகலை சிறப்புரை ஆற்றினர்.

6வது ஊதிய குழு முரண்பாடுகளை களையும் 3 நபர் குழுவின் அறிக்கையை வெளியிட வேண்டும். மத்திய அரசுக்கு இணையானஊதியம் இடைநிலை சாதாரண நிலை ஆசிரியர்களுக்கும் வழங்கப்பட வேண்டும்.தேர்தல் வாக்குறுதியின்படி தன்பங்கேற்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். ஆசிரியர் தகுதி தேர்வை ரத்து செய்து வேலைவாய்ப்பு அலுவலக சீனியாரிட்டி அடிப்படையில் ஆசிரியர்களை நியமனம் செய்ய வேண்டும். 

புதிய மருத்துவ காப்பீட்டு திட்ட தொகையை 50 ரூபாயாக குறைக்க வேண்டும்.இக்கோரிக்கைகள் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்திவரும் 15ம் தேதி மாலையில் நெல்லை மாவட்ட தொடக்க கல்வி அலுவலகம் முன்பு நடக்கும் ஆர்ப்பாட்டத்தில் திரளாக ஆசிரிய, ஆசிரியைகள் கலந்து கொள்வது என முடிவு செய்யப்பட்டது.

மாநில பொதுக்குழு உறுப்பினர் முத்தானந்தம் தேவதாஸ், முருகையா, மாவட்ட துணைத் தலைவர் பரமசிவன், நிர்வாகிகள் ஈஸ்வரன், முத்துசாமி,ஜெயசங்கர், மணிமேகலை, பால்ராஜ், பால் ராபர்ட், சுசிகர் சவுந்திரராஜன், ராஜ்குமார், கென்னடி, சுரேஷ் முத்துக்குமார், பவுல், காமராஜ், துரைராஜ், ஜெயக்குமார், அருள் மரியஜான்,அல்போன்ஸ், பிரம்மநாயகம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.மாவட்ட பொருளாளர் ரமேஷ் நன்றி கூறினார்.

Comments

Popular posts from this blog