ஆன்லைன் மூலம் டிஎன்பிஎஸ்சி தேர்வுகளை நடத்த திட்டம் 

ஆன்லைன் மூலம் டிஎன்பிஎஸ்சி தேர்வுகளை நடத்த திட்டமிட்டு, அதற்குரிய பணிகளை மேற்கொண்டு வருகிறோம் என்று டி.என்.பி.எஸ்.சி., தலைவர் ஆர். நட்ராஜ் கூறியுள்ளார்.

 திருச்சியில் நேற்று அவர் அளித்த பேட்டி: டிஎன்பிஎஸ்சி கடந்த ஆண்டில் சோதனை முறையில் 11 தேர்வுகளை ஆன்லைன் மூலம் நடத்தியது. 10,000 முதல் 15,000 பேர் வரை தேர்வு எழுதினால் இத்தேர்வுகளை நடத்துவதில் பிரச்னையில்லை. அதேநேரத்தில் தேர்வெழுத அதிகமானோர் விண்ணப்பிப்பதால் ஆன்லைன் மூலம் தேர்வுகளை நடத்துவதற்குரிய கணினிகளை பெறுவதில் சிரமம் உள்ளது.

 எனவே, மாற்று ஏற்பாடாக தேர்வுகளை ஆன்லைன் மூலம் நடத்துவது குறித்து ஐஐடி பேராசிரியர்களுடன் கலந்தாலோசித்து, நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். குரூப் 2 தேர்வில் தேர்வு பெற்று நேர்காணல் முடித்த 1426 பேருக்கும், குரூப் 4 தேர்வில் வெற்றி பெற்ற 1400 பேருக்கும் இன்று பணி நியமன ஆணைகள் வழங்கப்பட உள்ளன. 

இனி வரும் தேர்வுகள் மாற்றியமைக்கப்பட்ட டிஎன்பிஎஸ்சி பாடத்திட்டத்தின் கீழ் நடத்தப்படும்.ஆன்லைன் மூலம் தேர்வுகள் நடத்தப்பட உள்ளதால் வினாத்தாள்கள் முன்கூட்டியே வெளியாகும் வாய்ப்பு இனி இருக்காது என்றார் நட்ராஜ்.

Comments

Popular posts from this blog