PGT ONLINE COUNSELLING 700 இடங்களுக்காக தேர்வு பெற்ற முதுகலை ஆசிரியர்களுக்கு Online மூலம் நியமன ஆணை வழங்குவதற்கான கலந்தாய்வு 05-03-2013 செவ்வாய்க்கிழமைஅன்று காலை 10.00 மணிக்கு அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களில் நடைபெறுகிறது. நியமன ஆணை பெறும் ஆசிரியர்கள் அனைவரும் 03.06.2013 அன்று பணியில் சேர வேண்டும். 2011-12 ம் ஆண்டில் ஏற்பட்ட காலி இடங்கள் மற்றும் அதற்கு முந்தைய ஆண்டில் நிரப்பப்படாத காலி இடங்கள் ஆகியவை சேர்த்து 700 இடங்களுக் காக தேர்வு பெற்ற நபர்களுக்கு Online மூலம் நியமன ஆணை வழங்குவதற்கான கலந்தாய்வு 05-03-2013 செவ்வாய்க்கிழமை அன்று காலை 10.00 மணிக்கு அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களில் நடைபெறுகிறது. 2011-12 ம் ஆண்டில் ஏற்பட்ட காலி இடங்கள் மற்றும் அதற்கு முந்தைய ஆண்டில் நிரப்பப்படாத காலி இடங்கள் ஆகியவை சேர்த்து , 700 இடங்களுக்கு தகுதி வாய்ந்தவர்களின் பெயர் பட்டியலை , பள்ளிக் கல்வித் துறைக்கு , டி.ஆர்.பி. , வழங்கியது. இவர்கள் , வரும் , 5 ம்தேதி , மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களில் நடக்கும் , " ஆன்-லைன் ' கலந்தாய்வு மூலம் , பணி நியமனம் செய்யப்படுகின்றனர். இந்த கலந்தாய்வி ல் கீழ்க்கண்ட நடைமுறைகளை பின்பற்ற வேண்டும். 1. ஆசிரியர் தேர்வு வாரிய வரிசை எண்ணின் அடிப்படையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள காலிப்பணியிடங்களுக்கு அந்தந்த மாவட்டங்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கான கலந்தாய்வு முதலிலும் , இதன்பின்னர் இந்த கலந்தாய்வில் சொந்த மாவட்டங்களில் போதுமான காலிப்பணியிடங்கள் இல்லாததால் பணியிடம் கிடைக்கப் பெறாதவர்களுக்கும் மற்றும் வேறு மாவட்டங்களில் பணிபுரிய விருப்பமுள்ளவர்களுக்கான கலந்தாய்வு அன்றே தொடர்ந்து அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களில் நடத்தப்பட வேண்டும். 2. தங்கள் மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்டவர்கள் அனைவரும் அவர்களுடைய ஆசிரியர் தேர்வுவாரிய தேர்வுக்கூட நுழைவுச் சீட்டு , கல்விச் சான்றிதழ் மற்றும் இதர சான்றிதழ்களுடன் கலந்தாய்வில் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும் . 3 . ஒவ்வொரு பாடத்திற்கும் தனித்தனி கணினியை பயன்படுத்தி ஒரே நேரத்தில் அனைத்து பாடங்களுக்கும் கலந்தாய்வு நடத்தப்பட வேண்டும். 4 . தனியர் அவருக்குரிய இடத்தை தேர்வுசெய்தபின்னர் , அவர் எந்த பாட முதுகலை ஆசிரியராக தெரிவு செய்யப்பட்டுள்ளாரோ அதற்குரிய கல்வித்தகுதிகளை பெற்றுள்ளாரா என்பதை அவருடைய கல்விச் சான்றிதழ்கள் மற்றும் இதர சான்றிதழ்களை சரிபார்த்து அனைத்தும் சரியாக இருப்பின் நியமன ஆணையினை அவருக்குவழங்க வேண்டும் . நியமன ஆணைகளின் நகல் ஒன்றினை இணை இயக்குநர் (மேல்நிலைக் கல்வி) அவர்களின் பெயரிட்ட முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். 7. நியமன ஆணை பெறும் ஆசிரியர்கள் அனைவரும் 03.06.2013 அன்று பணியில் சேரும் வகையில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும். விவரத்தினை அன்றைய தினமே பாடவாரியாக இணை இயக்குநர்(மேநிக) அவர்களின் மின்னஞ்சலுக்கும் ஒரு நகலினை பெயரிட்ட முகவரிக்கும் அனுப்பி வைக்க வேண்டும். 8. ஏற்கனவே நடத்தப்பட்ட Online கலந்தாய்வுகளில் பின்பற்றப்பட்ட நடைமுறைகளை தவறாது இந்த கலந்தாய்விலும் பின்பற்றப்பட வேண்டும்

Comments

Popular posts from this blog