பள்ளி கல்வியில் புதிய திட்டங்கள்: அதிகாரிகளுடன் அமைச்சர் ஆலோசனை 

தமிழக பட்ஜெட்டில், பள்ளிக்கல்வி துறைக்கு, 17 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. 2013 -14ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில், அரசின் மற்ற துறைகளை காட்டிலும், பள்ளிக் கல்விக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டது. 

 இந்த நிதியை கொண்டு, புதிய திட்டங்கள் செயலாக்கம், கல்வி தரம் மேம்பாடு, ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாதவர் நியமனம் போன்றவை தொடர்பாக, அதிகாரிகளுடன் அமைச்சர் வைகைச்செல்வன் நேற்று ஆலோசனை நடத்தினார். 

கூட்டத்தில் எடுக்கப்பட்ட பள்ளி கல்விக்கான புதிய திட்டங்கள், அத்துறையின் மானிய கோரிக்கை அறிவிப்பில் வெளியாகும் எனத் தெரிகிறது.

Comments

Popular posts from this blog