ஜூன் 9ல் மாவட்டங்களில் பேரணி தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்றம் அறிவிப்பு
திருவண்ணாமலை: 21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜூன் 9ல் அனைத்து மாவட்டங்களிலும் ஆசிரியர்கள் பங்கேற்கும் பேரணி நடைபெறும் என்று தமிழ்நாடு தொடக்க பள்ளி ஆசிரியர் மன்றம் அறிவித்துள்ளது.தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின், வடக்கு மண்டல நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் திருவண்ணாமலையில் நடந்தது. இதில் திருவண்ணாமலை, விழுப்புரம், வேலூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, காஞ்சிபுரம் உள்ளிட்ட 11 மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற பொதுச்செயலாளர் க.மீனாட்சிசுந்தரம் பேசியதாவது:இடைநிலை ஆசிரியர் பயிற்சி முடித்தவர்களுக்கு, தகுதி தேர்வு நடத்துவதை தமிழக அரசு கைவிட வேண்டும்.
பதிவு மூப்பு முன்னுரிமை அடிப்படையில் பணி நியமனம் செய்ய வேண்டும். தமிழகம் முழுவதும் தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை வரும் கல்வி ஆண்டில் முழுமையாக நிரப்ப வேண்டும்.இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகளை தீர்ப்பதற்காக தமிழக அரசு மூவர் குழுவை நியமித்தது. அந்த குழுவின் அறிக்கையை உடனடியாக வெளியிட்டு, ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர் இயக்கங்களுடன் பரிந்துரைகள் குறித்து பேச்சு நடத்தி உரிய தீர்வுகளை காண அரசு முன்வர வேண்டும்.ஆசிரியர் மன்றத்தின் சார்பில் 21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜூன் 9ம் தேதி அனைத்து மாவட்டங்களிலும் ஆசிரியர்கள் பங்கேற்கும் பேரணி நடைபெறும். இவ்வாறுஅவர் பேசினார்.
பணிநிரந்தரம் செய்ய வலியுறுத்தி பகுதிநேர ஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டம் பணிநிரந்தம் செய்ய வலியுறுத்தி பகுதிநேர ஆசிரியர்கள் சென்னையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறையை சமாளிக்க பகுதிநேர ஆசிரியர்கள் 2012-ம் ஆண்டு முதல் தொகுப்பூதியத்தில் பணிநியமனம் செய்யப்படுகின்றனர். அதன்படி தற்போது 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பகுதிநேர ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் பள்ளிகளில் வாரந்தோறும் 3 நாட்கள் பாடம் நடத்துவர். அதற்கு மாதந்தோறும் ரூ.12,500 சம்பளமாக தரப்படுகிறது. இந்நிலையில் பணிநிரந்தரம் செய்யக் கோரி நீண்டகாலமாக அவர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக பகுதி நேர ஆசிரியர்கள் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி சென்னையில் நேற்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஈடுபட்ட நிர்வாகிகள் சிலரை பள்ளிக்கல்வித் துறை உயரதிகாரிகளிடம் பேச போலீஸார் அழைத்துச் சென்றனர். அதில் உடன்பாடு எட்டப்படவில்லை. இதுதொடர்பாக பகுதிநேர ஆசிரியர் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு நிர்வாகி கவுதமன் கூறும்போது, ''கோரிக்கையை நிறைவேற்ற...
Comments
Post a Comment