டி.என்.பி.எஸ்.சி., தேர்வு பாட திட்டம்: தமிழில் வெளியிட நடவடிக்கை
சென்னை: டி.என்.பி.எஸ்.சி., போட்டித் தேர்வுக்கான பாடத்திட்டங்கள், விரைவில், தமிழில் மொழிபெயர்த்து வெளியிடப்பட உள்ளன.
குரூப்-2, குரூப்-4, வி.ஏ.ஓ., உள்ளிட்ட, ஆறு தேர்வுகளுக்கான பாடத் திட்டங்களை, மீண்டும் மாற்றி அமைத்து, தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. பொது அறிவு பாடத்திட்டங்கள், திறன் அறிதல் மற்றும் கூர்மையாக சிந்தித்து விடை அளிக்கும் பகுதி ஆகியவை, ஆங்கில வழியில் வெளியிடப்பட்டு உள்ளன.
பத்தாம் வகுப்பு தர நிலையில் நடக்கும்குரூப்-4, வி.ஏ.ஓ., தேர்வுகளை, 10 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் எழுதுகின்றனர். இவர்களுக்கான பாடத்திட்டங்களும், ஆங்கில வழியில் உள்ளன. இதை, தமிழ் வழியில் வெளியிட்டால், தேர்வர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்பதால், விரைவில், இந்தப் பணியை முடித்து, தமிழ்வழியில் வெளியிட, தேர்வாணையம் முடிவு செய்துள்ளது.
குரூப்-4, வி.ஏ.ஓ., பொது தமிழ் பகுதியில், பொருத்துதல், பொருத்தமான பொருளை அறிதல், பொருந்தாத சொல்லை கண்டறிதல், இலக்கியம் மற்றும் சிற்றிலக்கியங்கள் உள்ளிட்டவை, பாடத்திட்டத்தில் இடம்பெற்றுள்ளன. புகழ்பெற்ற ஆசிரியர்களைப் பற்றிய பகுதி, புதிதாக சேர்க்கப்பட்டுள்ளதாக, துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
பணிநிரந்தரம் செய்ய வலியுறுத்தி பகுதிநேர ஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டம் பணிநிரந்தம் செய்ய வலியுறுத்தி பகுதிநேர ஆசிரியர்கள் சென்னையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறையை சமாளிக்க பகுதிநேர ஆசிரியர்கள் 2012-ம் ஆண்டு முதல் தொகுப்பூதியத்தில் பணிநியமனம் செய்யப்படுகின்றனர். அதன்படி தற்போது 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பகுதிநேர ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் பள்ளிகளில் வாரந்தோறும் 3 நாட்கள் பாடம் நடத்துவர். அதற்கு மாதந்தோறும் ரூ.12,500 சம்பளமாக தரப்படுகிறது. இந்நிலையில் பணிநிரந்தரம் செய்யக் கோரி நீண்டகாலமாக அவர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக பகுதி நேர ஆசிரியர்கள் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி சென்னையில் நேற்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஈடுபட்ட நிர்வாகிகள் சிலரை பள்ளிக்கல்வித் துறை உயரதிகாரிகளிடம் பேச போலீஸார் அழைத்துச் சென்றனர். அதில் உடன்பாடு எட்டப்படவில்லை. இதுதொடர்பாக பகுதிநேர ஆசிரியர் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு நிர்வாகி கவுதமன் கூறும்போது, ''கோரிக்கையை நிறைவேற்ற...
Comments
Post a Comment