அரசுக் கலை, அறிவியல் கல்லூரிகளுக்கு 1,093 உதவிப் பேராசிரியர்களைத் தேர்வு செய்வதற்கான அறிவிப்பாணையை ஆசிரியர்தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. 

இந்தப் பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் ஜூன் 19-ம் தேதி முதல் விநியோகம் செய்யப்படுகிறது. விண்ணப்பங்களை வாங்கவும், பூர்த்திசெய்யப்பட்ட விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கவும் கடைசி தேதி ஜூலை 10 ஆகும். 

ஆசிரியர் தேர்வு இரண்டு கட்டங்களாக நடைபெறும். முதல் கட்டத்தில் சமர்ப்பிக்கும் சான்றிதழ்களுக்கு மதிப்பெண்ணும், அடுத்தக் கட்டமாக நேர்முகத்தேர்வுக்கு மதிப்பெண்ணும்வழங்கப்படும். மொத்தம் 34 மதிப்பெண்அடிப்படையில் உதவிப் பேராசிரியர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்

.பணி அனுபவத்துக்கு 15 மதிப்பெண்: உதவிப் பேராசிரியர் நியமனத்தில் ஆசிரியர் பணி அனுபவத்துக்கு 15 மதிப்பெண் வழங்கப்படும். பல்கலைக்கழகங்கள், அரசு, அரசு உதவி பெறும் கல்லூரிகள், சம்பந்தப்பட்ட பாடங்களில் தனியார் மருத்துவ கல்லூரிகள், சட்டக் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள் (அனுமதிக்கப்பட்ட பணியிடங்கள்) கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். 

கல்வித் தகுதிக்கு 9 மதிப்பெண்: கல்வித் தகுதிக்கு அதிகபட்சமாக 9 மதிப்பெண் வழங்கப்படும். அந்தந்தப் பாடத்தில் பிஎச்.டி. பெற்றவர்களுக்கு 9 மதிப்பெண்ணும், எம்.பில். பட்டமும் ஸ்லெட், நெட் தேர்ச்சியும்பெற்றவர்களுக்கு 6 மதிப்பெண்ணும், பட்டமேற்படிப்புப் பட்டமும் ஸ்லெட், நெட் தேர்ச்சியும் பெற்றவர்களுக்கு 5 மதிப்பெண்ணும் வழங்கப்படும்.

நேர்முகத் தேர்வுக்கு 10 மதிப்பெண்: நேர்முகத் தேர்வுக்குஅதிகபட்சம் 10 மதிப்பெண் வழங்கப்படும். நேர்முகத் தேர்வு இல்லாமல் 24 மதிப்பெண்ணுக்கு விண்ணப்பதாரர் பெறும் வெயிட்டேஜ் மதிப்பெண் அடிப்படையில் பாடவாரியாக ரேங்க் பட்டியல் வெளியிடப்படும்.இந்த ரேங்க் பட்டியலில் இருந்து 1:5 என்ற அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். 

 இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கான தகுதி: பொதுப்பிரிவினராக இருந்தால் 55சதவீத மதிப்பெண்ணுடன் பட்டமேற்படிப்புப் பட்டம் மற்றும் யு.ஜி.சி., சி.எஸ்.ஐ.ஆர். அமைப்புகள் நடத்தும் நெட், ஸ்லெட் தேர்வுகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது பட்ட மேற்படிப்பில் 55 சதவீதமதிப்பெண்ணுடன் பி.எச்.டி. பட்டம் பெற்றிருக்க வேண்டும். 

எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் என்றால் குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண்ணுடன் பட்ட மேற்படிப்பு மற்றும் நெட், ஸ்லெட் தேர்வுகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது 50 சதவீத மதிப்பெண்ணுடன் பி.எச்.டி. பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: ஜூலை 1-ம் தேதியுடன் 57 வயது நிரம்பாதவராக இருக்க வேண்டும். மாவட்டத்துக்கு ஒரு கல்லூரி வீதம் 32 மையங்களிலும், சென்னையில் இரண்டு கல்லூரிகளிலும் விண்ணப்பங்கள் விற்பனை செய்யப்படும். விண்ணப்பத்தை ரூ.100செலுத்திப் பெற்றுக்கொள்ளலாம். பரிசீலனைக் கட்டணமாக விண்ணப்பத்துடன் ரூ.500 செலுத்த வேண்டும். பூர்த்திசெய்யப்பட்ட விண்ணப்பங்களைஅந்தந்த மையங்களிலேயே சமர்ப்பிக்கலாம்.

Comments

Popular posts from this blog