ஆசிரியர் தகுதித்தேர்வு ஆகஸ்டு மாதம் 17, 18–ந் தேதிகளில் நடத்தப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது 

சென்னை ஆசிரியர் தகுதித்தேர்வு ஆகஸ்டு மாதம் 17, 18–ந் தேதிகளில் நடத்தப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. இதற்கான விண்ணப்ப படிவங்கள் அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளிகளிலும் அடுத்த மாதம் (ஜூன்) 17–ந் தேதி முதல் விற்பனை செய்யப்பட உள்ளன. 

ஆசிரியர் தகுதித்தேர்வு மத்திய அரசின் இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின்படி, இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணி நியமனங்களுக்கு தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. 

அரசு பள்ளிகளில் சுமார் 23 ஆயிரம் ஆசிரியர் பணி இடங்களை நிரப்புவதற்காக கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தகுதித்தேர்வு நடத்தப்பட்டது. ஏறத்தாழ6½ லட்சம் ஆசிரியர்கள் தேர்வு எழுதியதில் 10397 இடைநிலை ஆசிரியர்களும், 8,849 பட்டதாரி ஆசிரியர்களும் தேர்ச்சி பெற்றனர். 

இந்த தகுதித்தேர்வு மூலம், காலியாக இருந்த அனைத்து இடைநிலை ஆசிரியர் பணி இடங்களும் நிரப்பப்பட்ட நிலையில், தகுதியானவர்கள் கிடைக்காததால் சுமார்10 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர் பணி இடங்கள் நிரப்பப்படவில்லை. காலியாக உள்ள ஆசிரியர் பணி இடங்கள் அடுத்த தகுதித்தேர்வு மூலமாக நிரப்பப்படும் என்று அரசு அறிவித்து இருந்தது. 

எனவே, இந்த ஆண்டுக்கான தகுதித்தேர்வு எப்போது நடத்தப்படும்? என்று இடைநிலை ஆசிரியர்களும், பட்டதாரி ஆசிரியர்களும் ஆவலுடன் எதிர்பார்த்துவந்தனர்.

Comments

  1. But Exemption will be granted to persons whose appointment process initiated prior to NCTE notifications dated 23.08.2010

    ReplyDelete
  2. TET Notification
    But Exemption will be granted to persons whose appointment process initiated prior to NCTE notifications dated 23.08.2010

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog