தகுதி இல்லாதவர்கள் நியமனம் சிறப்பு ஆசிரியர்களால் கல்வி அழிகிறது புதுடெல்லி, மே 21: ஆரம்ப பள்ளிகளில் மாநில அரசுகள், போதிய கல்வி தகுதி இல்லாத சிறப்பு ஆசிரியர்களை நியமிப்பதற்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. குஜராத் மாநில ஆரம்ப பள்ளிகளில் �சிறப்பு ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படுவதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த மனு நீதிபதிகள் பி.எஸ்.சவுகான், தீபக் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது: கல்வி உரிமை சட்டம் அமலுக்கு வந்த பின்பும், இதுபோன்ற நடைமுறைகள் பின்பற்றப்படுவது அதிர்ச்சியாக இருக்கிறது. கல்வி உதவியாளர்களாக நியமிக்கப்படும் இந்த சிறப்பு ஆசிரியர்களின் கல்வி தகுதியை அறிய விரும்புகிறோம். உத்தரப் பிரதேசத்தில் �சிக்ஷா சகாயக்� என்ற பெயரில் கல்வி உதவியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் எல்லாம் உதவியாளர்கள் அல்ல கல்வியின் எதிரிகள். நாம் அளிக்கும் கல்வியின் தரம் மிக முக்கியம். முறையான கல்வி தகுதியில்லாத சிறப்பாசிரியர்களை நியமிப்பதால், ஒட்டுமொத்த கல்வி முறையை அழிக்கிறோம்” என்றனர்.

Comments

Popular posts from this blog