8-ல் ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு சென்னையில் ஆர்ப்பாட்டம்
8-ல் ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு சென்னையில் ஆர்ப்பாட்டம்ஆசிரியர் தகுதித் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி வரும் 8-ம் தேதி சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்துவது என ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டமைப்புக் கூட்டம், மாநிலத் தலைவர் அண்ணாதுரை தலைமையில்கடலூரில் வியாழக்கிழமை நடந்தது.மாவட்டத் தலைவர் ராஜா, பொருளர் சுப்பிரமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் மகளிரணி நிர்வாகி ஜீவா, மாநில பொதுச்செயலர் தாஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.6-வது ஊதியக் குழு குறைபாடுகளை களைய அமைக்கப்பட்ட மூன்று நபர் குழு அறிக்கையை வெளியிட வேண்டும். இடைநிலை ஆசிரியர்களுக்கானஅடிப்படை ஊதியத்தை ரூ.5,200-லிருந்து ரூ.9,300-ஆக உயர்த்த வேண்டும்.ஆசிரியர் தகுதித் தேர்வை ரத்து செய்ய வேண்டும். பழைய ஓய்வூதியதிட்டத்தை நடைமுறைபடுத்த வேண்டும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி வரும்8-ம் தேதி சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்துவது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பணிநிரந்தரம் செய்ய வலியுறுத்தி பகுதிநேர ஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டம் பணிநிரந்தம் செய்ய வலியுறுத்தி பகுதிநேர ஆசிரியர்கள் சென்னையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறையை சமாளிக்க பகுதிநேர ஆசிரியர்கள் 2012-ம் ஆண்டு முதல் தொகுப்பூதியத்தில் பணிநியமனம் செய்யப்படுகின்றனர். அதன்படி தற்போது 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பகுதிநேர ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் பள்ளிகளில் வாரந்தோறும் 3 நாட்கள் பாடம் நடத்துவர். அதற்கு மாதந்தோறும் ரூ.12,500 சம்பளமாக தரப்படுகிறது. இந்நிலையில் பணிநிரந்தரம் செய்யக் கோரி நீண்டகாலமாக அவர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக பகுதி நேர ஆசிரியர்கள் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி சென்னையில் நேற்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஈடுபட்ட நிர்வாகிகள் சிலரை பள்ளிக்கல்வித் துறை உயரதிகாரிகளிடம் பேச போலீஸார் அழைத்துச் சென்றனர். அதில் உடன்பாடு எட்டப்படவில்லை. இதுதொடர்பாக பகுதிநேர ஆசிரியர் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு நிர்வாகி கவுதமன் கூறும்போது, ''கோரிக்கையை நிறைவேற்ற...
when will govt conduct tet exam ?
ReplyDeleteCM announcement may 10 wait and see
ReplyDeletereally cm will announce may 10
ReplyDeleteYes really announce
ReplyDelete