பட்டதாரி, முதுகலை பட்டதாரி ஆசிரியர் நியமனத்தில் தமிழ்வழி ஒதுக்கீட்டு இடங்களை நிரப்புவதில் பிரச்சினை.

பட்டதாரி, முதுகலை பட்டதாரி ஆசிரியர் நியமனத்தில் தமிழ்வழி ஒதுக்கீட்டு இடங்களை நிரப்புவதில் பிரச்சினை ஏற்பட்டு உள்ளது. விண்ணப்பதாரர்கள் எந்த வழியில் பி.எட். படித்தாரர்கள் என்பது சான்றிதழில் குறிப்பிடப்படாததால் தகுதியான நபர்களை தேர்வு செய்யமுடியாமல் ஆசிரியர் தேர்வு வாரியம் திணறுகிறது.

20 சதவீத இடஒதுக்கீடு தமிழக அரசின் வேலைவாய்ப்பில், தமிழ்வழியில் படித்தவர்களுக்கு 20 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது.குறிப்பிட்ட பணிக்கு நிர்ணயிக்கப்பட்ட கல்வித்தகுதியை தமிழ்வழியில் படித்து முடித்தவர்கள் தமிழ்வழி ஒதுக்கீட்டு சலுகையைப் பெற்றுக்கொள்ளலாம். 

உதாரணத்திற்கு எழுத்தர் பதவி என்றால் 10–ம் வகுப்பை தமிழ்வழியில் படித்திருக்க வேண்டும். அதேபோல், பட்டப் படிப்பு கல்வித்தகுதி கொண்ட பதவிகளுக்கு குறிப்பிட்ட பட்டப் படிப்பை தமிழ்வழியில் படித்தால் சலுகை கிடைக்கும். எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்–2 படிப்புகளை எந்த வழியில் படித்தார்?என்பது பார்க்கப்படாது. 

இதன்படி, பட்டதாரி ஆசிரியர் பணிக்கு குறிப்பிட்ட பட்டப் படிப்பையும், பி.எட். படிப்பையும் தமிழ்வழியில் படித்திருக்க வேண்டும். அதேபோல், முதுகலை பட்டதாரி ஆசிரியர் எனில் முதுகலை பட்டப் படிப்பையும், பி.எட். படிப்பையும் தமிழ் வழியில் படித்திருந்தால் போதும். அந்த பாடத்தில் பட்டப் படிப்பை எந்த வழியில் படித்திருக்கலாம். அது பார்க்கப்படாது.

ஆசிரியர் நியமனத்தில் பிரச்சினை அரசு மேல்நிலைப்பள்ளிகளில் சுமார் 3 ஆயிரம் முதுநிலை பட்டதாரி ஆசிரியர், உடற்கல்வி இயக்குனர் பணி இடங்களை நிரப்புவதற்காக கடந்த ஆண்டு மே மாதம் ஆசிரியர் தேர்வு வாரியம் போட்டித்தேர்வு நடத்தியது. அதன் முடிவு அறிவிக்கப்பட்டு, தமிழ்வழி இடஒதுக்கீடு, தாவரவியல் பாட ஆசிரியர் நீங்கலாக, தேர்வு செய்யப்பட்டோர் பட்டியல் கடந்த ஜனவரி மாதம் வெளியிடப்பட்டது.

 நீதிமன்ற வழக்கு காரணமாக நீண்ட நாட்களுக்குப் பிறகு அண்மையில் தாவரவியல் ஆசிரியர் பட்டியலை தேர்வுவாரியம் வெளியிட்டது. தமிழ் வழியில் படித்தோருக்கான ஒதுக்கீட்டு பட்டியல் இன்னும் வெளியிடப்படவில்லை. வரலாறு, பொருளாதாரம், வணிகவியல் ஆகிய பாடங்களுக்கு மட்டுமே இந்த இடஒதுக்கீடு வழங்க முடியும். 

எம்.எஸ்.சி. அறிவியல் படிப்புகளைப் பொருத்தவரையில், தமிழ்நாட்டில் எங்கேயும் தமிழ்வழியில் நடத்தப்படவில்லை. ஒரேயொரு பல்கலைக்கழகத்தில் மட்டும் புவியியலில் எம்.எஸ்சி. படிப்பு வழங்கப்படுகிறது. 

எந்த வழியில் பி.எட். பட்டம்? கடந்த சில மாதங்களுக்கு முன்பு தகுதித்தேர்வு மூலம் பட்டதாரி ஆசிரியர்களை தேர்வு செய்த ஆசிரியர் தேர்வு வாரியம் தமிழ்வழி ஒதுக்கீட்டு இடங்களை நிரப்புவதற்கு படாதபாடு பட்டது. காரணம், எந்த வழியில் பி.எட். படித்தார்கள் என்பதுசான்றிதழில் குறிப்பிடப்படவில்லை. 

ஆனால், பலர் தமிழ்வழி இடஒதுக்கீட்டிற்கு பரிசீலிக்க கேட்டிருந்தார்கள்.தேர்வில் வெற்றிபெற்றவர்கள் தாங்கள் பி.எட். படித்த கல்லூரியில்இருந்து தமிழ்வழியில் படித்ததற்கான சான்றிதழை தனியாக வாங்கினாலும் அதன்உண்மைத்தன்மையை அறிவதற்காக கல்வியியல் படிப்புகளை கவனிக்கும் தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தை ஆசிரியர் தேர்வு வாரியம் அணுகியது.

 எந்த வழியில் பி.எட். படிப்பு வழங்க அனுமதி வழங்கப்பட்டதோ அந்த அனுமதியின் படிதான் பி.எட். படிப்பு வழி பரிசீலிக்கப்படும் என்று தேர்வு வாரியம் கூறிவிட்டது.ஆசிரியர் தேர்வு வாரியம் திணறல்ஆனால், தமிழக மாணவர்களின் இதர மாநில வேலை வாய்ப்புகளை கருத்தில்கொண்டு அதுபோன்று தமிழ் மீடியம் அல்லது ஆங்கில மீடியம்என்று ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் குறிப்பிடுவது கிடையாது.

 பல்வேறு பிரச்சினைகளுக்குப் பிறகு ஒருவழியாக பட்டதாரிஆசிரியர் நியமனத்தில் தமிழ்வழி ஒதுக்கீடு வழங்கப்பட்டது.தற்போதுவரலாறு, பொருளாதாரம், வணிகவியல் பாடங்களில் முதுகலை பட்டதாரி ஆசிரியர் நியமனத்திற்கு தமிழ்வழி ஒதுக்கீட்டு இடங்களை நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியம் முழுமுயற்சியில் ஈடுபட்டுள்ளது.

 தமிழ்வழியில் பி.எட். பட்டம் பெற்றதுஉறுதிசெய்யப்பட்ட பின்னர் இந்த மாத இறுதியில் தேர்வு பட்டியல் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Comments

Popular posts from this blog