கடலூர் மாவட்டத்தில்: 168 அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி

கடலூர் மாவட்டத்தில், இந்த ஆண்டில், 168 அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் ஆங்கிலவழிக் கல்வி தொடங்கப்படுவதாக கடலூர் மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார். 

உதவி தொடக்க கல்வி அலுவலர்களின் கூட்டம், கடலூரில் சனிக்கிழமை நடந்தது.அனைவருக்கும் கல்வி இயக்க முதன்மை கல்வி அலுவலர் மார்ஸ் தலைமை வகித்தார். மாவட்டத்தொடக்க கல்வி அலுவலர் குணசேகரன், அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் முத்துக்கிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் குணசேகரன் பேசுகையில், கடலூர் மாவட்டத்தில் இந்த கல்வியாண்டில் 168தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி தொடங்கப்பட்டுள்ளது. இதுவரை தமிழ்வழியில் பாடம் நடத்தி வந்த ஆசிரியர்கள், இனி ஆங்கில வழியில் நடத்த சிரமப்படுவார்கள்.

 இதனை கருத்தில் கொண்டு ஆசிரியர்களுக்கு ஆங்கில வழிப் பாடம் நடத்த சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்படும். கடலூர் மாவட்டத்தில், 10 ஆயிரம் குழந்தைகள், தொடக்கப் பள்ளிகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த எண்ணிக்கைகுறைவானது. எனவே, மாணவர் சேர்க்கையை அதிகரிக்க அங்கன்வாடியில் பயின்ற 5 வயது குழந்தைகளை பள்ளிகளில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Comments

Popular posts from this blog