ஆசிரியர் தகுதி தேர்வு: தமிழக அரசு புதிய அறிவிப்பு. ஆசிரியர் தகுதி தேர்வு தொடர்பாக அரசு புதிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் 23.8.2010க்கு முன் ஆசிரியர் தொடர்பான அறிவிப்பு வெளியாகி சான்றிதழ் சரி பார்க்கப்பட்டு அதன் பின்னர் பணி நியமனம் செய்யப்பட்ட அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் அனைவரும் ஆசிரியர் தகுதி தேர்வு எழுத தேவையில்லை.ஆனால் இந்த தேதிக்கு பின்னர் ஆசிரியர் தேர்வு தொடர்பாக அறிவிப்பு வெளியாகி பணி நியமனம் பெற்ற ஆசிரியர்கள் இத்தேர்வை எழுத வேண்டும் என தேசிய ஆசிரியர் கல்வி நிறுவனம் அறிவித்துள்ளது.தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு ஆசிரியர் தேர்வு வாரிய பொது தகவல் அலுவலர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்படி தமிழகத்தில் 23.8.2010க்கு பின்னர்அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணி நியமனம் செய்யப்பட்டஇடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் அனைவரும் ஆசிரியர் தகுதி தேர்வு எழுத வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது

Comments

Popular posts from this blog