சிறப்பு ஆசிரியர்கள் நியமனத்துக்கான பதிவு மூப்பு பட்டியல் வெளியீடு 

தையல் , ஓவியம் உள்ளிட்ட சிறப்பு ஆசிரியர்கள் பணி நியமனத்தையொட்டி காஞ்சிபுரம் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு மூப்பு பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது . 

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் லி . சித்ரசேனன் வெளியிட்டுள்ள அறிக்கையில் : ஓவியம் , தையல் , உடற்கல்வி மற்றும் இசை ஆகிய சிறப்பு ஆசிரியர் பணியிடங்கள் பதிவு மூப்பு அடிப்படை யில் நிரப்பப்படவுள்ளன . இதற்காக வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து வரும் பதிவு தாரர்கள் பட்டியல் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் ஒட்டப்பட்டுள்ளது . 

எனவே பதிவுதாரர்கள் , இப்பட்டியலில் தங்கள் பெயர் உள்ளதா என சரிபார்த்துக் கொள்ளலாம் . இப்பட்டியலில் பெயர் இடம்பெறாதவர்கள் , தங்களது அனைத்து சான்றிதழ்கள் மற்றும் வேலைவாய்ப்பு பதிவு அடையாள அட்டையுடன் வரும் ஜூன் 10- ம் தேதிக்குள் மாவட்ட வேலைவாய்ப்பு உதவி இயக்குநரை அணுகலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது . 


Comments

Popular posts from this blog