2013-14ம் கல்வி ஆண்டில் மேல்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்ட 100 பள்ளிகளுக்கு அனுமதிக்கப்பட்டுள்ள முதுகலைஆசிரியர் பணியிடங்களை நிரப்ப பொது மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு.
2013-14ம் கல்வி ஆண்டில் மேல்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளுக்கு அனுமதிக்கப்பட்டுள்ள முதுகலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப பொது மாறுதல் கலந்தாய்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன் படி
1 20.07.2013 சனிக்கிழமை காலை 10மணி மாவட்டத்திற்குள்
2 22.07.2013 திங்கட்கிழமை காலை 10 மணி மாவட்டம் விட்டு மாவட்டம்
கலந்தாய்வு நடைபெறும்.
கலந்தாய்வு வழிகாட்டு நெறிமுறைகள் :
1. 2013-14ம் கல்வியாண்டில் மே-2013ல் நடைபெற்ற ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வில் மாறுதல் ஆணை பெற்றவர்கள் இந்த மாறுதல் கலந்தாய்வில் கலந்துகொள்வதற்கு கண்டிப்பாக அனுமதிக்கப்படக்கூடாது.
2. 2013-14ம் கல்வியாண்டில் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளிகளில் ஏற்படும் காலிப்பணியிடங்களுக்கு பெண் ஆசிரியர்கள் மட்டுமே நியமிக்கப்படவேண்டும், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளிகளில் ஆண் ஆசிரியர்கள் மட்டுமே நியமனம் செய்யப்படவேண்டும். இருபாலர் பயிலும் பள்ளிகளில் ஏற்படும் காலிப்பணியிடங்களுக்கு பொது மாறுதல் விதிகளின்படி ஆண் மற்றும் பெண் ஆசிரியர்களுக்கு மாறுதல் அளிக்கலாம் என அரசு கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளில் பெண்கள் பள்ளிகளில் பெண்ஆசிரியர்கள் மட்டும், ஆண்கள் பள்ளிகளில் ஆண் ஆசிரியர்கள் மட்டும்மற்றும் இருபாலர் பள்ளிகளில் இருபால் ஆசிரியர்களுக்கும் மாறுதல் வழங்கலாம்.
3. மாறுதல் கோரும் ஆசிரியர்களின் விண்ணப்பங்களை தலைமை ஆசிரியர்கள் வழியாக 19.07.2013 மாலை 5 மணிக்குள் பெற்று அரசாணையில் தெரிவித்துள்ள நெறிமுறைகளின்படி முன்னுரிமையினை நிர்ணயம் செய்ய வேண்டும். புதியதாக தரம் உயர்த்தப்பட்ட அரசு மேல்நிலைப்பள்ளிகளில் மாவட்ட மாறுதலுக்குப்பின் காலிப்பணியிடம் இருப்பின் மாவட்டம் விட்டு மாவட்டம்கலந்தாய்வை நடத்தலாம். மாவட்டம் விட்டு மாவட்ட கலந்தாய்விற்கான விண்ணப்பங்களை கலந்தாய்வு அன்று தலைமையாசிரியர் ஒப்பத்துடன் ஆசிரியர்கள் அளித்தால் அதனைப் பெற்று முன்னுரிமை நிர்ணயம் செய்துகொள்ள வேண்டும்.
4. இந்த கலந்தாய்வு புதியதாக தரம் உயர்த்தப்பட்ட 100 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள முதுகலை ஆசிரியர்கள் பணியிடங்களுக்கு மட்டுமே நடத்தப்பட வேண்டும்

Comments

Popular posts from this blog