ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு பறக்கும் படைகள் தயார் : ஆட்சியர்

சென்னையில் நடைபெற உள்ள ஆசிரியர் தகுதித் தேர்வினை கண்காணிக்க 100 ஆசிரியர்களைக் கொண்ட பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக சென்னை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
தேர்வு பணிகள் குறித்து ஆய்வுக் கூட்டம் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.
ஆசிரியர் தேர்வு வாரியத்தால் ஆசிரியர் தகுதித் தேர்வு வரும் 17 மற்றும் 18ம் தேதிகளில் நடைபெறுகிறது.
சென்னையில் 17ம் தேதி முதல் தாள் தேர்வினை 27 தேர்வு மையங்களில் 9056 பேரும், 18ம் தேதி இரண்டாம் தாள் தேர்வினை 75 மையங்களில் 26,043 பேரும் எழுதுகின்றனர்.
தேர்வினை கண்காணிக்க 100 ஆசிரியர்களைக் கொண்ட பறக்கும் படைகள் நியமிக்கப்பட்டுள்ளது. மேலும், தேர்வு மையங்களுக்கு அதிக பேருந்துகளை இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று மாவட்ட ஆட்சியர் சுந்தரவல்லி என்று தெரவித்தார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர்கள், முதன்மைக் கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர்கள், காவல்துறை அதிகாரிகள், மின்துறை அலுவலர்கள், தீயணைப்புத் துறை அலுவலர்கள், துணை ஆட்சியர் மற்றும் வட்டாட்சியர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Comments

Popular posts from this blog