முதுகலை ஆசிரியர் தேர்வில் தவறான கேள்வியை நீக்க முடிவு

முதுகலை ஆசிரியர் தேர்வுக்கான,இறுதி, "கீ-ஆன்சர்',வரும், 20ம் தேதிக்குள் வெளியிடப்படும் என,டி.ஆர்.பி.,வட்டாரங்கள் தெரிவித்தன. கடந்த மாதம், 21ம் தேதி,முதுகலை ஆசிரியர் தேர்வு நடந்தது.1.67லட்சம் பேர் தேர்வை எழுதியுள்ளனர்.  

இதற்கான தற்காலிக, "கீ-ஆன்சர்',டி.ஆர்.பி.,இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. கேள்விமற்றும் விடைகள் குறித்து, 1,000தேர்வர்கள்,மாற்று கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.
தேர்வர்களின் கருத்துக்களை,பாட வாரியான நிபுணர் குழு,ஆய்வு செய்து வருகிறது. 

இது குறித்து,டி.ஆர்.பி.,வட்டாரங் கள் கூறுகையில், "விடை தவறாக இருந்தால்,அதற்குரிய மதிப்பெண்,தேர்வர்களுக்கு வழங்கப்படமாட்டாது. மாறாக,சம்பந்தபட்ட கேள்வி,தேர்வில் இருந்து நீக்கப்படும். சரியான கேள்வி பதில்களுக்கு மட்டும் மதிப்பெண்கள் வழங்கப்பட்டு, 20ம் தேதிக்குள், இறுதி, "கீ-ஆன்சர்'வெளியிடப்படும்,'என,தெரிவித்தன. ஒவ்வொரு கேள்விக்கும், 1மதிப்பெண் வீதம்,மொத்தம், 150மதிப்பெண்களுக்கு, கேள்விகள்கேட்கப்பட்டன. 

இதில், 10முதல், 15கேள்விகளோ அல்லது அதற்கான பதில்களோ தவறாக கொடுக்கப்பட்டிருக்கலாம் என,கூறப்படுகிறது
.எனவே 150 மதிப்பெண்களில், 15 மதிப்பெண்கள் வரை நீக்கப்பட்டு,மீதமுள்ள மதிப்பெண்கள் அடிப்படையில்,தேர்வுப் பட்டியல் வெளியிடப்படும் என்று கூறப்படுகிறது.

Comments

Popular posts from this blog