ஆசிரியர் நியமனத்திற்கு வெயிட்டேஜ் மதிப்பெண் கணக்கிடுவது எப்படி?

ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சிபெறுவதற்கு 60 சதவீத மதிப்பெண் (150–க்கு 90 மதிப்பெண்) எடுக்க வேண்டும். இடைநிலை ஆசிரியர்நியமனத்தைப் பொருத்தவரையில், ஆசிரியர் நியமனம் தொடர்பான சுப்ரீம் கோர்ட்டு வழக்கில் தீர்ப்பு வரும்வரை தகுதித்தேர்வில்தேர்ச்சி பெற்றவர்களில் மாநில அளவிலான பதிவுமூப்பு அடிப்படையில் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள்.

பட்டதாரி ஆசிரியர் நியமனத்திற்கு, தகுதி தேர்வு மதிப்பெண், பிளஸ்–2 மதிப்பெண், பட்டப் படிப்பு மற்றும் பி.எட். மதிப்பெண் ஆகியவற்றின் அடிப்படையில் நியமனம் நடைபெறும். தகுதித்தேர்வுக்கு 60 மதிப்பெண்ணும், பிளஸ்–2 தேர்வுக்கு 15 மதிப்பெண்ணும், பட்டப் படிப்புக்கு 15 மதிப்பெண்ணும், பி.எட். படிப்புக்கு 15 மதிப்பெண்ணும் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. மொத்தம் 100 மதிப்பெண். தகுதித்தேர்வில் ஒருவர் எடுக்கும் மதிப்பெண் 60–க்கு மாற்றப்படும். 

பிளஸ்–2, டிகிரி, பி.எட். தேர்வில் மதிப்பெண் ஒதுக்கீடு விவரம் பின்வருமாறு:–

12–ம் வகுப்பு
90 சதவீதம் மற்றும் அதற்கு மேல் மதிப்பெண் பெற்றிருந்தால் – 10 (அதிகபட்ச முழு மதிப்பெண்)
80 சதவீதம் முதல் 90 சதவீதத்திற்குள் – 8 மதிப்பெண்
70 சதவீதம் முதல் 80 சதவீதத்திற்குள் – 6 மதிப்பெண்
60 சதவீதம் முதல் 70 சதவீதத்திற்குள் – 5 மதிப்பெண்
50 சதவீதம் முதல் 60 சதவீதத்திற்குள் – 2 மதிப்பெண்

பட்டப் படிப்பு
70 சதவீதம் மற்றும் அதற்கு மேல் – 15 மதிப்பெண் (முழு மதிப்பெண்)
50 சதவீதம் முதல் 70 சதவீதத்திற்குள் – 12 மதிப்பெண்
50 சதவீதத்திற்கு கீழ் – 10 மதிப்பெண்

பி.எட். படிப்பு
70 சதவீதம் மற்றும் அதற்கு மேல் – 15 மதிப்பெண் (முழு மதிப்பெண்)
50 சதவீதம் முதல் 70 சதவீதத்திற்குள் – 12 மதிப்பெண்

தகுதித்தேர்வு
90 சதவீதம் மற்றும் அதற்கு மேல் – 60 மதிப்பெண் (முழு மதிப்பெண்)
80 சதவீதம் முதல் 90 சதவீதத்திற்குள் – 54 மதிப்பெண்
70 சதவீதம் முதல் 80 சதவீதத்திற்குள் – 48 மதிப்பெண்
60 சதவீதம் முதல் 70 சதவீதத்திற்குள் – 42 மதிப்பெண்

Comments

Popular posts from this blog