ஆசிரியர் தகுதித் தேர்வு: தாழ்த்தப்பட்டவர்களுக்கு சலுகை மதிப்பெண்கள் வழங்கிடக் கோரி வழக்கு


ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கான மதிப்பெண்களில் தாழ்த்தப்பட்டவர்கள் உள்ளிட்ட இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு சலுகை வழங்கிட வேண்டும் என்று கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மத்திய, மாநில தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின அரசு ஊழியர்கள் கூட்டமைப்பின் நிறுவனர் எஸ். கருப்பையா பொது நல மனு தாக்கல் செய்துள்ளார்.

கடந்த 2009-ஆம் ஆண்டின் இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின்படி தொடக்க, நடுநிலைப் பள்ளி ஆசிரியர் பணி நியமனத்துக்கு தகுதித் தேர்வு எழுதுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக கடந்த 2010-ஆம் ஆண்டு தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் அறிவிக்கை வெளியிட்டது. ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற குறைந்தபட்சம் 60 சதவீத மதிப்பெண்களைப் பெற வேண்டும் என்றும்,இந்த தேர்ச்சி மதிப்பெண்களில் தாழ்த்தப்பட்ட, பழங்குடியின, இதர பிற்படுத்தப்பட்ட மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு சலுகை வழங்குவது பற்றி ஏற்கெனவே உள்ள இடஒதுக்கீட்டு கொள்கைகளின்படி அந்தந்த மாநில அரசுகள் உரிய முடிவெடுத்துக் கொள்ளலாம் என்றும் அந்த அறிவிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அதன்படி ஆந்திர மாநிலத்தில் தாழ்த்தப்பட்ட, பழஙுóகுடியினருக்கான தேர்ச்சி மதிப்பெண் 40 சதவீதம் என்றும், ஒரிசா, மணிப்பூர் மாநிலங்களில் 50 சதவீதம் என்றும், உத்தரப்பிரதேசத்தில் 55 சதவீதம் என்றும் குறைக்கப்பட்டு சலுகை தரப்பட்டுள்ளது. எனினும் தமிழகத்தில் அதற்கான நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை.

 கடந்த 2012-ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு சலுகை வழங்கப்படவில்லை.
இதனைத் தொடர்ந்து தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் அறிவிக்கையின்படி தாழ்த்தப்பட்டோர் உள்ளிட்ட இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு தேர்ச்சி மதிப்பெண்களில் சலுகை வழங்கும்படி கடந்த 16.4.2013 அன்று தமிழக அரசுக்கு கோரிக்கை மனு அனுப்பினேன். எனினும் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை. இந்நிலையில் நடப்பாண்டில் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்துவதற்கான அறிவிக்கையை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.

இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு மதிப்பெண் சலுகை வழங்காத நிலையில், ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இந்த அறிவிக்கைக்கு தடை விதிப்பதோடு, இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு மதிப்பெண் சலுகை வழங்க நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில்கருப்பையா கோரியுள்ளார்.

இந்த மனு தலைமை நீதிபதி ஆர்.கே.அகர்வால், நீதிபதி எம்.சத்தியநாராயணன் ஆகியோரைக் கொண்ட முதன்மை அமர்வில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்சார்பில் ஆஜரான வழக்குரைஞர் ப.விஜேந்திரன், தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் அறிவிக்கையின்படி பிற மாநிலங்களில் இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு சலுகை அளிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழ்நாட்டில் மட்டும் அதனை மறுப்பது சட்ட விரோதமானது என்று வாதிட்டார். அரசுத் தரப்பில் அரசு கூடுதல் வழக்குரைஞர் பி.சஞ்சய்காந்தி ஆஜரானார்.
இதனையடுத்து இந்த மனு தொடர்பாக அரசுத்தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தர
விட்டனர்.

Comments

Popular posts from this blog