குரூப் 1 பிரதான தேர்வு: 3 மாதத்தில் முடிவுகள் வெளியீடு

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய (டி.என்.பி.எஸ்.சி.) குரூப் 1 பிரதான தேர்வு முடிவுகள் மூன்று மாதத்தில் வெளியிடப்படும் என்று தேர்வாணையத் தலைவர் ஏ. நவநீதகிருஷ்ணன் தெரிவித்தார். துணை ஆட்சியர், துணை கண்காணிப்பாளர் உள்ளிட்ட 25 பதவிகளுக்கான குரூப் 1 பிரதான தேர்வு ஞாயிற்றுக்கிழமையுடன் நிறைவடைந்தது. 

சென்னையில் கடந்த 3 நாள்களாக நடைபெற்று வந்த இந்தத் தேர்விவை ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் எழுதினர். நூற்றுக்கும் மேற்பட்டோர் இந்தத் தேர்வில் பங்கேற்கவில்லை. 

குரூப் 1 தேர்வு முடிவுகள் தொடர்பாக டி.என்.பி.எஸ்.சி. தலைவர் ஏ. நவநீதகிருஷ்ணன் கூறியது: டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகளை எந்தவிதத் தவறுக்கும் இடம் தராமல் நடத்துவதற்கு முன்னுரிமை வழங்கப்பட்டு வருகிறது. மிகவும் வெளிப்படைத்தன்மையோடு குரூப் 1 பணிகளுக்கு ஆள்கள் தேர்வு செய்யப்படுவார்கள். பிரதான தேர்வு முடிவுகள் 3 மாதங்களில் வெளியிடப்படும். அதன்பிறகு நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டு, தேர்ச்சியானவர்கள் விரைவில் பணி நியமனம் செய்யப்படுவார்கள் என்றார் அவர்.

Comments

Popular posts from this blog