சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்த இடைநிலை ஆசிரியர்களுக்கு தகுதித்தேர்வு தேவையில்லை 

நெல்லை: தூத்துக்குடி மாவட் டம், கோவில்பட்டியை சேர்ந்த ஜெயபாரதி, சகுந்தலா, தமயந்தி, செந்தாமரை உள்ளிட்ட 12 பேர் மதுரை ஐகோர்ட் கிளை யில் ஒரு மனு தாக்கல் செய்தனர். 

அந்த மனுவில், ‘‘நாங்கள் ஆசிரியர் பயிற்சி (டி.டி.எட்) முடித்துள்ளோம். கடந்த 2009ம் ஆண்டு இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை வேலைவாய்ப்பு அலுவலக மாநில பதிவு மூப்பு அடிப்படையில் நிரப்ப அரசு உத்தரவிட்டது. அதன்படி எங்களுக்கு கடந்த 3.6.2009 அன்று சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்தது. 

அதன் பின், எங்களுக்கு நியமன ஆணை எதுவும் வரவில்லை. இதுகுறித்து, விளக்கம் கேட்டபோது, 23.8. 2010க்கு பின்னர் பணியில் சேரும் ஆசிரியர்கள் கண்டிப்பாக தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளதாகவும், அதன்படி தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றால்தான் எங்களுக்கு பணி நியமனம் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இந்த விதிமுறை அமலுக்கு வருவதற்கு முன்னதாகவே எங்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்து விட்டது. 

எனவே, எங்களை தேர்வு எழுதுமாறு நிர்பந்திக்காமல் பணி வழங்க உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிபதி நாகமுத்து, ‘‘ஆசிரியர் பணியில் சேர தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்ற விதி கொண்டு வரப்படுவதற்கு முன்னரே மனுதாரர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்துவிட்டது. 

எனவே மனுதாரர்கள் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்று நிர்பந்திக்கக்கூடாது என உத்தரவிட்டார். இந்த உத்தரவின் நகலை கல்வித்துறை செயலாளர், இயக்குனர், ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் உள்ளிட்ட கல்வித்துறை மற்றும் வேலை வாய்ப்புத்துறை அதிகாரிகளுக்கு அனுப்பவும் நீதிபதி உத்தரவிட்டார்.

Comments

Popular posts from this blog