ஆங்கில வழி கல்வி: ஆசிரியர்கள் நியமனமின்றி தவிக்கும் பள்ளிகள்

தொடக்க பள்ளிகளில்,ஆங்கில வழி கல்விக்கு தனிப்பிரிவு ஏற்படுத்தப்பட்டு,மாணவர்கள் பயின்று வரும் வேளையில்,ஆசிரியர் நியமனமின்றி,பள்ளி ஆசிரியர்களே ஆசிரியர்களை நியமித்து பாடம்நடத்த வேண்டியதுள்ளது. 

 மெட்ரிக்.,பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்க வேண்டுமென்ற பெற்றோர்களின் ஆசையால் அரசு தொடக்க பள்ளிகளில்,மாணவர் சேர்க்கை குறைந்தது.அரசு பள்ளிகளில் ஆங்கில வழி கல்வியை,இந்த ஆண்டு முதல் அரசு அறிமுகப்படுத்தி செயல்படுத்தி வருகிறது. இவர்களுக்கு தனி புத்தகங்கள்,தனி வகுப்பறை,தனி ஆசிரியர் வசதியை ஏற்படுத்தி கொடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. 

10 மாணவர்கள் இருந்த பள்ளியில்,தற்போது30க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வரும் நிலை உள்ளது. ஆங்கில வழி புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே உள்ள வகுப்பறையின் ஒரு பகுதி,ஆங்கில வழிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால்,தனியாக ஆசிரியர் நியமனம் இதுவரை இல்லை. 

இதனால்,பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம்,கூடுதல் ஆசிரியர்களை,அந்தந்த பள்ளியின் தலைமை ஆசிரியரே நியமித்து வருகின்றனர். நியமனம் மட்டுமே பெற்றோர் ஆசிரியர் கழகத்தால் மேற்கொள்ளப்படுகிறது. ஆனால்,சம்பளம் அந்த பள்ளியில் பணிபுரியும் தலைமை ஆசிரியர்,ஆசிரியர் ஆகியோர் தான் வழங்க வேண்டியதுள்ளது. 

மாணவர்கள் எண்ணிக்கை வேண்டும் என்பதால்,ஆசிரியர்களும்,தங்கள் சம்பளத்தின் ஒரு பகுதியை இவர்களுக்கு வழங்கி வருகின்றனர். ஆசிரியர் ஒருவர் கூறியதாவது: அரசு திட்டங்களை அமல்படுத்தும்போது, அதற்குரிய கட்டமைப்பை மேம்படுத்தவும் வேண்டும். 

ஆரம்ப பள்ளிகளில், ஆரம்பிக்கப்பட்ட ஆங்கில வழி கல்விக்கு,ஆசிரியர் நியமனம் இதுவரை இல்லை. தற்காலிக அடிப்படையிலாவது அரசு நியமிக்க வேண்டும். எனவே,தமிழகம் முழுவதும் உள்ள ஆங்கில வழி கல்வி தொடக்க பள்ளிகளுக்கு,தனி ஆசிரியரை நியமித்து,மாணவர்களின் ஆரம்ப கல்வியை மேம்படுத்த வேண்டும் என்றார்.

Comments

Popular posts from this blog