திருச்சியில்ஆசிரியர்கள் உண்ணாவிரதம்

திருச்சி சிந்தாமணி அண்ணாசிலை அருகே தமிழ்நாடு ஒருங்கிணப்பு பட்டதாரி ஆசிரியர் சங்கம் மற்றும் அனைத்து ஆசிரியர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி செவ்வாய்க்கிழமை உண்ணாவிரதம் நடைபெற்றது.

இந்த உண்ணாவிரதப் போராட்டத்துக்கு சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ராமதாஸ் தலைமை வகித்தார். உண்ணாவிரத்தை அரூர் சட்டப்பேரவை உறுப்பினர் டில்லிபாபு தொடக்கிவைத்தார்.

உண்ணாவிரதத்தில் வலியுறுத்தப்பட்ட கோரிக்கைகள்:
சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவின்படி ஆசிரியர் தகுதித் தேர்விலிருந்து விலக்கு அளிப்பது தொடர்பான இறுதித் தீர்ப்பை நடைமுறைப்படுத்த வேண்டும்.

ஆசிரியர் கல்வித் தகுதி பெற்றவர்களுக்கு என்டிவிடி 2001 விதியின்படி தேர்விலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் இதில் வலியுறுத்தப்பட்டன.

Comments

Popular posts from this blog