முதுகலை ஆசிரியர் சான்றிதழ் சரிபார்ப்பு தேர்வுமுடிவினை வெளியிட இடைக்கால தடை 

முதுகலை ஆசிரியர் சான்றிதழ் சரிபார்ப்பு எதிர்த்து மதுரை ஐகோர்ட் கிளை யில் விசாரணைக்கு வந்தது.முதுகலை ஆசிரியர் சான்றிதழ் சரிபார்ப்பு,வரும், 22, 23ம் தேதிகளில், மாநிலம் முழுவதும், 14இடங்களில் நடக்கின்றன. இதில் பங்கேற்பதற்கானஅழைப்பு கடிதங்கள், டி.ஆர்.பி., இணையதளத்தில் வெளியிடப்பட்டன. 

 சான்றிதழ். சரிபார்ப்பிற்கு டிஆர்பி விளக்கக் குறிப்பேட்டில் குறிப்பிட்டவாறு வகுப்புவாரி இடஒதுக்கீட்டின் கீழ் இறுதி கட் -ஆப் மதிப்பெண் பெற்றவர்கள் அனைவரும் அழைக்கப்படவில்லை .வயதில் மூத்தோர் மட்டுமே அழைக்கப்பட்டுள்ளனர் .இதனை எதிர்த்து மதுரை ஐகோர்ட் கிளையில் நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த இரு தேர்வர்களும் இராமநாதபுரம் மாவட்டதைச் சேர்ந்த ஒருவர் என 3 வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளன 

 இவ் வழக்குகள் இன்று (21 அக் ) நீதியரசர் நாகமுத்து அவர்கள் முன்னிலையில் விசாரணைக்கு.வந்தது இன்றைய வழக்கு விசாரணைக்குப்பின் மனுதாரர்களை சான்றிதழ் சரிபார்ப்பில் சேர்த்து தகுதியின் அடிப்படையில் பரிசீலிக்க உத்தரவிட்ட நீதிபதி தேர்வுமுடிவினை வெளியிட இடைக்கால தடை உத்தரவையும் பிறப்பித்ததாக மனுதாரர்கள் தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன 

 சான்றிதழ். சரிபார்ப்பிற்கு டிஆர்பி விளக்கக் குறிப்பேட்டில் குறிப்பிட்டவாறு வகுப்புவாரி இடஒதுக்கீட்டின் கீழ் இறுதி கட் -ஆப் மதிப்பெண் பெற்றவர்கள் அனைவரும் அழைக்கப்படவேண்டும் .அவ்வாறு அழைக்கப்படவிட்டால் வெயிட்டேஜ் மதிப்பெண் உள்ளவர்கள் பாதிப்படைவார்கள் .

எனவே அவர்களுக்கும் சான்றிதழ் சரிபார்ப்புக்கு நடத்தப்பட்டு அக் 28 அன்று நீதிமன்றத்தில் புதிய பட்டியல் சமர்ப்பிக்கவும் உத்தரவிட்டார் என மனுதாரரின் வழக்கறிஞர் தாழை முத்தரசு தெரிவித்தார். நாளை தொடங்கும் சான்றிதழ் சரிபார்ப்புக்கு தடையேதும் விதிக்கப்படவில்லை என்பதால் ஏற்கனவே அறிவித்தபடி சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கும்

Comments

Popular posts from this blog