பதில் மனு தாக்கல் செய்வதில் தாமதம் ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவருக்கு உயர்நீதிமன்றம் அபராதம்

பட்டதாரி ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான பதில்களில் குளறுபடி தொடர்பான வழக்கில் பதில் மனுத்தாக்கல் செய்யாததால், தேர்வு வாரியத் தலைவருக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அபராதம் விதித்தது. 

 ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய பட்டதாரி ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான விடைகளில் 9 விடைகள் தவறாக உள்ளதாக நெல்லை மாவட்டம் விக்ரமசிங்கபுரத்தைச் சேர்ந்த சூரியா தனது மனுவில் குறிப்பிட்டு இருந்தார். கடந்த 22ஆம் தேதி இந்த மனு விசாரிக்கப்பட்ட போது இதற்கு பதிலளிக்குமாறு ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவருக்கு உத்தரவிட்டு இருந்தார்.  இந்நிலையில் இந்த வழக்கு புதன்கிழமை விசாரிக்கப்பட்டது. அப்போதும் ஆசிரியர் தேர்வு வாரியம் தரப்பில் பதில்மனு தாக்கல் செய்யப்படவில்லை. 

இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவு: ஓராண்டாக இவ்வழக்கு நிலுவையில் உள்ளது. பதில் மனுத்தாக்கல் செய்வதற்கு தேர்வு வாரியம் சார்பில் அடுத்தடுத்து கால அவகாசம் கோரப்பட்டது. இதனால் வழக்கு விசாரணையில் தாமதம் ஏற்பட்டு வருகிறது. மேலும் மனுதாரர் மனரீதியாக பாதிக்கப்படும் வாய்ப்பு உள்ளது. எனவே, பதில் மனு தாக்கல் செய்யாததற்கு ஆசிரியர் தேர்வு வாரியத்தலைவருக்கு நீதிமன்றம் ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கிறது என உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது. வழக்கு விசாரணையை நீதிபதி வரும் நவம்பர் 11-ம் தேதிக்கு ஒத்திவைத்தார். 

 சூரியா மனு விவரம்: 2012 அக்.14-ம் தேதி ஆசிரியர் தேர்வு வாரியம் பட்டதாரி ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வை நடத்தியது. தேர்வுவாரியம் வெளியிட்ட மேற்குறிப்பிட்ட தேர்வுக்கான விடைகளில் (கீ ஆன்சர்) 9 கேள்விகளுக்கு தவறான விடை குறிப்பிடப்பட்டு உள்ளது. இதனால் தனது தேர்ச்சி பாதிக்கப்பட்டு உள்ளதால் 9 கேள்விக ளுக்கும் மதிப்பெண் வழங்க வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தார்.

Comments

Popular posts from this blog