"செட்' தேர்வு எப்போது? முதுநிலைப் பட்டதாரிகள் எதிர்பார்ப்பு

கல்லூரி ஆசிரியர் பணிக்கான மாநில அளவிலான தகுதித் தேர்வு (செட்)
குறித்த வழக்கு முடிவுக்கு வந்த நிலையில், நடப்பு ஆண்டுக்கான
தேர்வு எப்போது நடத்தப்படும் என்ற எதிர்பார்ப்பு முதுநிலை பட்டதாரிகளிடையே எழுந்துள்ளது

"நெட்', மாநில அளவில் நடத்தப்படும் "செட்' ஆகிய தேர்வுகளில்தகுதி அல்லது பி.எச்டி.படிப்பை முடித்திருப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதில் நெட் தேர்வை பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி)ஆண்டுக்கு இரண்டு முறை நடத்தி வருகிறது.

செட் தேர்வை அந்தந்த
மாநிலங்களில் உள்ள ஏதாவது ஒரு பல்கலைக்கழகம் நடத்தி வருகிறது. தமிழகத்தில் கோவை பாரதியார் பல்கலைக்கழகம் 2015-ஆம் ஆண்டு வரை "செட்' தேர்வை நடத்த தமிழக அரசிடம் அனுமதி பெற்றுள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்பு வரை ஆண்டுக்கு இரண்டு முறை நடத்தப்பட்டு வந்த"செட்' தேர்வு, இப்போது ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே நடத்தப்படுகிறது.

தேர்வுக்கான விளம்பரம் ஆகஸ்ட் மாதம் வெளியிடப்படும். அக்டோபரில்
தேர்வு நடத்தப்படும். இந்த நிலையில், கடந்த 2012-ம் ஆண்டு நடத்தப்பட்ட "செட்' தேர்வு தொடர்பாக, உயர் நீதிமன்ற மதுரை கிளையில்வழக்கு ஒன்று தொடரப்பட்டதால், 2013-ஆம் ஆண்டுக்கு இந்தத்தேர்வை நடத்துவது தொடர்ந்து தாமதமாகி வந்தது.

"செட்' தேர்வு நடத்தி முடிக்கப்பட்ட பிறகு,தேர்வு முடிவு வெளியிடுவதற்கு சில நாள்களுக்கு முன் தேர்ச்சி நடைமுறையில் மாற்றம் கொண்டுவருவதை எதிர்த்து இந்த வழக்கு தொடரப்பட்டது. அதாவது 2012 "நெட்' மற்றும் "செட்' தேர்வுகள் நடத்தும் வரை, இந்தத் தேர்வில்இடம்பெறும் மூன்று தாள்களுக்கும் தனித் தனி தேர்ச்சி விகிதம் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இதனடிப்படையில் தேர்ச்சி பெறுபவர்கள், கல்லூரி ஆசிரியர் பணிக்கு தகுதியானவராக அறிவிக்கப்பட்டனர்.

இந்த நிலையில், 2012 தேர்வுக்குப் பிறகு இந்த தாள்களுக்கான தனித்தனி தேர்ச்சி விகிதத்தோடு, அனைத்தையும் உள்ளடக்கி சராசரி தேர்ச்சி விகிதம் ஒன்றும் நிர்ணயிக்கப்பட்டது. இந்த புதிய நடைமுறையின் அடிப்படையிலேயே தேர்வு முடிவுகளும்
வெளியிடப்பட்டன.

இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளை இப்போது தீர்ப்பு அளித்துள்ளது. தேர்வு நடத்தும்போது இருந்த நடைமுறையின் அடிப்படையில்,தகுதி பெறுபவர்களுக்கு தகுதிச் சான்றிதழை 30 நாள்களுக்குள் வெளியிட வேண்டும் என தீர்ப்பளித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, இந்த வழக்கின் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த"செட்' தேர்வு உடனடியாக நடத்தப்படுமா என்ற எதிர்பார்ப்பு முதுநிலை பட்டதாரிகளிடையே எழுந்துள்ளது.

இது குறித்து பாரதியார் பல்கலைக்கழக உயர் அதிகாரி கூறியது: "செட்' தேர்வு தொடர்பான வழக்கின் காரணமாகத்தான், 2013-ஆம்ஆண்டுக்கு தேர்வு நடத்துவது தாமதமாகி வந்தது. இப்போது,யுஜிசி மற்றும் தமிழக அரசின் அனுமதி கிடைத்தவுடன் தேர்வு நடத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும் என்றார்.

Comments

Popular posts from this blog