13 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு ?

 நேற்று வெளியிடப்பட்டதகுதித்தேர்வு முடிவில் தேர்ச்சி பெற்றவர்களிலிருந்து சுமார் 13 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு செய்துள்ளது. இதற்காக பாடவாரியான காலியிடங்களை கணக்கெடுக்கும் பணிநடந்து ஏற்கனவே முடிந்துள்ளது. 

13ஆயிரம் இடங்கள் இடைநிலை ஆசிரியர்களுக்கும் பட்டதாரி ஆசிரியர்களுக்கும் கடந்தஆகஸ்ட்17, 18ஆகியதேதிகளில் தகுதித்தேர்வு நடத்தப்பட்டது. ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய இந்த தகுதித்தேர்வை ஆறரைலட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் எழுதினர். தேர்வுமுடிவு நேற்று வெளியிடப்பட்டது இந்த தகுதித்தேர்வு மூலம் 13ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு செய்துள்ளது. 

இதில் பட்டதாரி ஆசிரியர் பணி இடங்கள் மட்டும்10ஆயிரம்அடங்கும். மீதமுள்ள 3ஆயிரம் இடங்கள் இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் ஆகும். பாட வாரியாக கணக்கெடுப்பு பட்டதாரிஆசிரியர், இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் குறித்த விவரங்கள் பள்ளிக்கல்வித்துறை,தொடக்கக் கல்வித்துறை,ஆதிதிராவிடர் நலத்துறை,நகராட்சி பள்ளிகள், சென்னைமாநகராட்சி, கோவை மாநகராட்சி என பல்வேறு துறைகளில் இருந்துவந்துள்ளன.

 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை பாடவாரியாகவும்,துறைவாரியாகவும் கணக்கெடுக்கப்பட்டு சான்றிதழ் சரிபார்ப்புக்கு பின் ஆசிரியர் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது

Comments

Popular posts from this blog