டி.இ.டி., தேர்வர், டி.ஆர்.பி.,க்கு படையெடுப்பு; குறைகளை கேட்க தனி மையம் அமைப்பு
ஆசிரியர் தகுதி தேர்வில் ( டி.இ.டி.,), சரியான மதிப்பெண் கிடைக்காமல், பாதிக்கப்பட்ட தேர்வர்கள், தினமும், ஆசிரியர் தேர்வு வாரிய (டி.ஆர்.பி.,)
அலுவலகத்திற்கு படை எடுக்கின்றனர். இவர்களின் குறைகளை கேட்டு, உரிய பதில் அளிப்பதற்காக, குறை கேட்பு மையத்தை, டி.ஆர்.பி., அமைத்துள்ளது.
சென்னை, டி.பி.ஐ., வளாகத்தில் உள்ள, டி.ஆர்.பி., அலுவலகத்திற்குள் சென்று, அதிகாரிகளை சந்திப்பது என்பது, சாமானிய காரியம் அல்ல. பாதுகாப்பு நிறைந்த பகுதி என, கூறி, பார்வையாளர்களை, நுழைவாயிலில் தடுத்து நிறுத்தி விடுவர். தேர்வில், குளறுபடிகள் நடந்தால், தேர்வர், டி.ஆர்.பி.,க்கு படை எடுத்துவிடுவர். அவர்களை சமாளிக்கும் வகையில், அலுவலக வாயிலில், பணியாளர் ஒருவரை நியமித்து, தேர்வர்களிடம் இருந்து, விண்ணப்பங்களை பெற, டி.ஆர்.பி., நடவடிக்கை எடுக்கும். அந்த வகையில், தற்போது, டி.இ.டி., தேர்வில் எழுந்துள்ள பிரச்னைகள் காரணமாக, தேர்வர்கள் ஏராளமானோர், தினமும், டி.ஆர்.பி.,க்கு சென்றபடி உள்ளனர்.
தற்காலிக விடைகளை வெளியிட்டபோதே, தவறான விடைகளை ஆட்சேபித்து, ஏராளமான தேர்வர்கள், விண்ணப்பம் அளித்தனர். "இதை ஆய்வு செய்து, இறுதி விடைகளை வெளியிடும்போது, உரிய நடவடிக்கை எடுக்கப்படும்' என, டி.ஆர்.பி., பதிலளித்தது. ஆனால், நவ., 5ம் தேதி வெளியான, டி.இ.டி., தேர்வு முடிவுடன் கூடிய இறுதி விடையில், சரியான விடைகள் பலவற்றுக்கு, உரிய மதிப்பெண் வழங்காதது, தேர்வர்களுக்கு தெரிய வந்தது. இதையடுத்து, டி.ஆர்.பி., அலுவலகத்திற்கு, சென்றபடி உள்ளனர். தேர்வர்களிடம் இருந்து, விண்ணப்பங்களை பெற்று, உரிய பதில் அளிப்பதற்கு ஏதுவாக, அலுவலக வாயிலில், குறை கேட்பு மையம் ஒன்றை, டி.ஆர்.பி., அமைத்துள்ளது. இங்குள்ள பணியாளர், தேர்வர்களின் குறைகளை கேட்டறிந்து, அவர்களிடம் இருந்து, விண்ணப்பங்களை பெற்று வருகிறார். சரியான விடைகளுக்கு மதிப்பெண் வழங்காதது குறித்தும், சரியான விடை என்பதற்கான ஆதாரங்களையும், விண்ணப்பத்துடன் இணைத்து, தேர்வர்கள் வழங்கி வருகின்றனர்.
எனவே, இந்த விண்ணப்பங்கள் மீது, மீண்டும் ஒரு முறை, டி.ஆர்.பி., ஆய்வு செய்யும் என, எதிர்பார்க்கப்படுகிறது
பணிநிரந்தரம் செய்ய வலியுறுத்தி பகுதிநேர ஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டம் பணிநிரந்தம் செய்ய வலியுறுத்தி பகுதிநேர ஆசிரியர்கள் சென்னையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறையை சமாளிக்க பகுதிநேர ஆசிரியர்கள் 2012-ம் ஆண்டு முதல் தொகுப்பூதியத்தில் பணிநியமனம் செய்யப்படுகின்றனர். அதன்படி தற்போது 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பகுதிநேர ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் பள்ளிகளில் வாரந்தோறும் 3 நாட்கள் பாடம் நடத்துவர். அதற்கு மாதந்தோறும் ரூ.12,500 சம்பளமாக தரப்படுகிறது. இந்நிலையில் பணிநிரந்தரம் செய்யக் கோரி நீண்டகாலமாக அவர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக பகுதி நேர ஆசிரியர்கள் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி சென்னையில் நேற்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஈடுபட்ட நிர்வாகிகள் சிலரை பள்ளிக்கல்வித் துறை உயரதிகாரிகளிடம் பேச போலீஸார் அழைத்துச் சென்றனர். அதில் உடன்பாடு எட்டப்படவில்லை. இதுதொடர்பாக பகுதிநேர ஆசிரியர் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு நிர்வாகி கவுதமன் கூறும்போது, ''கோரிக்கையை நிறைவேற்ற...
respected sir next exam eppa vaipanganu guess panna mudiyuma
ReplyDelete