இடைநிலை ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு விபரம் சரிபார்க்கும் பணி நடைபெறுகிறது. 

இடைநிலை ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற வேலை வாய்ப்பு அலுவலக பதிவுதாரர்கள், தங்களது வேலை வாய்ப்பு பதிவு அடையாள அட்டை, குடும்ப அட்டை, கல்விச் சான்றிதழ்கள், தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றதற்கான ஆதாரம் ஆகியவற்றுடன் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்துக்கு நேரில் சென்று தங்களது பதிவு விபரத்தை சரிபார்த்துக்கொள்ள வேண்டும் என அரசு அறிவித்துள்ளது. 

இதற்கான அறிவிப்பு அந்தந்த மாவட்ட வேலைவாய்பு அலுவலகத்தின் மூலம் வெளியிடப்படும் எனத்தெரிகின்றது. இதன்படி தேனி மாவட்டத்தில் இடைநிலை ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு வெள்ளிக்கிழமை(நவ.22) மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு விபரம் சரிபார்க்கும் பணி நடைபெறுகிறது.

Comments

Popular posts from this blog