நாடு முழுவதும் 6 லட்சம் ஆசிரியர்கள் பற்றாக்குறை: மத்திய மந்திரி பல்லம் ராஜூ தகவல்
நாடு முழுவதும் 6 லட்சம் ஆசிரியர்கள் பற்றாக்குறையாக இருப்பதாக மத்திய மந்திரி பல்லம் ராஜூ தெரிவித்துள்ளார்.ஜார்கண்ட் மாநிலம் ஜாம்ஷெட்பூரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை மந்திரி பல்லம் ராஜூ, பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
6 லட்சம் ஆசிரியர்கள்
பள்ளிகளின் உள் கட்டமைப்பு மேம்பாடு, ஆசிரியர் நியமனம் உள்ளிட்டவற்றில் நாம் விரைவாக முன்னேறி வருகிறோம். ஆனால் தரமான கல்விச்சேவையில் இன்னும் அதிக முன்னேற்றம் தேவைப்படுகிறது. இதற்கு முக்கிய காரணமாக ஆசிரியர் பற்றாக்குறை விளங்கி வருகிறது.நாடு முழுவதும் 6 லட்சம் ஆசிரியர் பற்றாக்குறை நிலவுகிறது. எனினும் மாணவர்களுக்கு தரமான கல்வியை வழங்கும் நோக்கில், ஆசிரியர் காலியிடங்களை நிரப்புவதில் முதற்கட்ட நடவடிக்கைகள் அனைத்தும் எடுக்கப்பட்டு வருகிறது.இவ்வாறு மத்திய மந்திரி தெரிவித்தார்.
பணிநிரந்தரம் செய்ய வலியுறுத்தி பகுதிநேர ஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டம் பணிநிரந்தம் செய்ய வலியுறுத்தி பகுதிநேர ஆசிரியர்கள் சென்னையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறையை சமாளிக்க பகுதிநேர ஆசிரியர்கள் 2012-ம் ஆண்டு முதல் தொகுப்பூதியத்தில் பணிநியமனம் செய்யப்படுகின்றனர். அதன்படி தற்போது 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பகுதிநேர ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் பள்ளிகளில் வாரந்தோறும் 3 நாட்கள் பாடம் நடத்துவர். அதற்கு மாதந்தோறும் ரூ.12,500 சம்பளமாக தரப்படுகிறது. இந்நிலையில் பணிநிரந்தரம் செய்யக் கோரி நீண்டகாலமாக அவர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக பகுதி நேர ஆசிரியர்கள் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி சென்னையில் நேற்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஈடுபட்ட நிர்வாகிகள் சிலரை பள்ளிக்கல்வித் துறை உயரதிகாரிகளிடம் பேச போலீஸார் அழைத்துச் சென்றனர். அதில் உடன்பாடு எட்டப்படவில்லை. இதுதொடர்பாக பகுதிநேர ஆசிரியர் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு நிர்வாகி கவுதமன் கூறும்போது, ''கோரிக்கையை நிறைவேற்ற...
Comments
Post a Comment