ஆசிரியர் தகுதித் தேர்வில் சலுகை மதிப்பெண் வழங்கப்படுமா?
ஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு தேர்ச்சி மதிப்பெண்ணில் சலுகை வழங்க வேண்டும் என தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் வலியுறுத்தியுள்ளது. இந்த நிலையில், இப்போதாவது இந்தச்சலுகையை முதல்வர் வழங்குவாரா?
என தி.மு.க. தலைவர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை:ஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு மதிப்பெண் சலுகை அளிக்காத அதிகாரிகள் மீது தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளது. அதிகாரிகள் மீது நடவடிக்கை என்றால் அரசு மீது மறைமுகமான குற்றச்சாட்டு என்றுதான் பொருளாகும்.ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு மொத்த மதிப்பெண் 150. தேர்ச்சி பெறுவதற்கு குறைந்தபட்சம் 60 சதவீத மதிப்பெண் அதாவது 90 மதிப்பெண் பெற வேண்டும்.
ஏற்கெனவே நடைபெற்ற இரண்டு ஆசிரியர் தகுதித் தேர்வுகளில் தேர்ச்சி விகிதம் குறைவாக இருந்தது. அதிலும் குறிப்பாக தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் மிகக் குறைந்த எண்ணிக்கையிலேயே தேர்வாகி இருந்தனர். எனவே, குறைந்தபட்சம் இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்காவது தேர்ச்சி மதிப்பெண்ணில் சலுகை வழங்கப்படும் என எதிர்பார்த்தபோதிலும், தேர்ச்சி மதிப்பெண்ணில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை.பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் ஆகியோருக்கு உயர் வகுப்பினரைப் போலவே 60 சதவீத மதிப்பெண் தேர்ச்சி மதிப்பெண்ணாக தமிழகத்தில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இது தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சிலின் வழிகாட்டுதலுக்கு விரோதமானது ஆகும். அதன் வழிகாட்டுதலின் படி, ஆந்திரப் பிரதேசத்தில் உயர் வகுப்பினருக்கு 60, பிற்படுத்தப்பட்டோருக்கு 50, தாழ்த்தப்பட்டோருக்கு 40 சதவீத மதிப்பெண்ணும், அசாமில் உயர் வகுப்பினருக்கு 60, மற்றவர்களுக்கு 55 சதவீத மதிப்பெண்ணும், ஒரிசா மாநிலத்தில் உயர் வகுப்பினருக்கு 60, பிற வகுப்பினருக்கு 50 சதவீத மதிப்பெண்ணும் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.இந்த நிலையில், தமிழகத்தில் அதிமுக அரசு அனைத்துப் பிரிவினருக்கும் தேர்ச்சி மதிப்பெண் 60 சதவீதம் என நிர்ணயித்துள்ளது என்பது பெரியாரின் சமூக நீதி கொள்கைக்கு எதிரானது. இடஒதுக்கீட்டுக் கொள்கைக்கும் விரோதமானது ஆகும்.2013 ஆகஸ்ட் மாதம் நடைபெறும் ஆசிரியர் தகுதித் தேர்விலாவது இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு தேர்ச்சி மதிப்பெண்ணில் மாற்றம் செய்ய வேண்டும் என கோரினேன்.
ஆனால், இதை அதிமுக அரசு காதில் போட்டுக்கொள்ளவில்லை.பொதுப்பள்ளிக்கான மாநில மேடை அமைப்பின் பொதுச்செயலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு ஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு மதிப்பெண் சலுகை அளிக்காதது குறித்து தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய சென்னை மண்டல இயக்குநருக்கு புகார் கொடுத்திருக்கிறார்.அந்தப் புகாரை ஆய்வு செய்த வெங்கடேசன் தமிழக அரசுக்கு உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
அதில், தேசிய ஆசிரியர் கல்விக் கவுன்சிலின் வழிகாட்டுதலை ஏற்று தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணை 181-ல், ஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு சலுகை வழங்க வழிசெய்யப்பட்டுள்ளது என்றும், ஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு மதிப்பெண் சலுகை வழங்க வேண்டும் எனவும்உத்தரவிட்டுள்ளார் என்று கருணாநிதி கூறியுள்ளார்.
பணிநிரந்தரம் செய்ய வலியுறுத்தி பகுதிநேர ஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டம் பணிநிரந்தம் செய்ய வலியுறுத்தி பகுதிநேர ஆசிரியர்கள் சென்னையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறையை சமாளிக்க பகுதிநேர ஆசிரியர்கள் 2012-ம் ஆண்டு முதல் தொகுப்பூதியத்தில் பணிநியமனம் செய்யப்படுகின்றனர். அதன்படி தற்போது 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பகுதிநேர ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் பள்ளிகளில் வாரந்தோறும் 3 நாட்கள் பாடம் நடத்துவர். அதற்கு மாதந்தோறும் ரூ.12,500 சம்பளமாக தரப்படுகிறது. இந்நிலையில் பணிநிரந்தரம் செய்யக் கோரி நீண்டகாலமாக அவர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக பகுதி நேர ஆசிரியர்கள் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி சென்னையில் நேற்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஈடுபட்ட நிர்வாகிகள் சிலரை பள்ளிக்கல்வித் துறை உயரதிகாரிகளிடம் பேச போலீஸார் அழைத்துச் சென்றனர். அதில் உடன்பாடு எட்டப்படவில்லை. இதுதொடர்பாக பகுதிநேர ஆசிரியர் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு நிர்வாகி கவுதமன் கூறும்போது, ''கோரிக்கையை நிறைவேற்ற...
Comments
Post a Comment