'செமஸ்டர்' வாரியாக மதிப்பெண் சான்றிதழ்களை சமர்ப்பிக்க வேண்டும் எனும்உத்தரவை, டி.ஆர்.பி., மறுபரிசீலனை செய்ய கோரிக்கை
'ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், சான்றிதழ் சரிபார்ப்பின்போது, வாரியாக மதிப்பெண் சான்றிதழ்களை சமர்ப்பிக்க வேண்டும்' என, ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,) உத்தரவிட்டுள்ளதால், பல்கலைகளுக்கும், கல்லூரிகளுக்கும் அலைந்து தவிக்கின்றனர்.
ஆக., 17, 18 ல் நடந்த ஆசிரியர் தகுதித் தேர்வுகளில், தேர்ச்சி பெற்ற பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கான, சான்றிதழ் சரிபார்ப்பு, ஜன., 20 முதல் 27 வரை, அந்தந்த மாவட்டங்களில்நடக்கிறது. 'தாள்- 2 ல் தேர்ச்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர்கள், கல்லூரியில் படித்த போது வழங்கப்பட்ட'செமஸ்டர்' வாரியான சான்றிதழ்களை, கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும்' என, டி.ஆர்.பி., உத்தரவிட்டுள்ளது.
பொதுவாக, பணிநியமனத்திற்கு டிகிரி சான்றிதழும், இறுதி மதிப்பெண் சான்றும் சமர்ப்பிக்கப்படும். இதனால்'செமஸ்டர்' வாரியான மதிப்பெண் சான்றுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. தற்போது, டி.ஆர்.பி.,யின் உத்தரவால், தேர்ச்சி பெற்றவர்கள் பல்கலைகளுக்கும், கல்லூரிகளுக்கும் அலைந்து, சான்றிதழ்களை கேட்டவண்ணம் உள்ளனர். கல்லூரிகள், பல்கலையையும்; பல்கலைகள், அந்தந்த கல்லூரிகளையும்
கைகாட்டுவதால், சான்று பெறமுடியாமல், தேர்ச்சி பெற்றவர்கள் தவிக்கின்றனர். கல்லூரியில்அல்லது தொலைநிலைக் கல்லூரியில் படித்தபோது 'முடிவு நிறுத்தி வைப்பு' (வித்ஹெல்டு)அல்லது மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பித்த பாடத்திற்கான சான்று, பலருக்கு அனுப்பப்படவில்லை.
இதுகுறித்து பல்கலைகள், 'கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது' என, பதில் கூறுகின்றன. கல்லூரிகளில் கேட்டால், 'பல்கலையில் இருந்து அதுபோன்ற சான்றிதழ்கள் வரவில்லை' என கூறுகின்றனர். 'பல்கலையால் சான்றிதழ் அனுப்பி வைக்கப்படவில்லை' என்ற சான்றும், தேர்ச்சி பெற்றவர்களுக்கு கல்லூரிகள் தர மறுக்கின்றன.
இதனால், சான்றிதழ் சரிபார்ப்பில் 90 சதவீதத்திற்கும் மேல், 'செமஸ்டர்' வாரியாக சான்றிதழ்கள் சமர்ப்பிக்க முடியாத நிலை உள்ளது. 'புதிய உத்தரவை, டி.ஆர்.பி., மறுபரிசீலனை செய்ய வேண்டும்' எனதேர்ச்சி பெற்றவர்கள் எதிர்பார்க்கின்றனர்.
புதிய உத்தரவிற்கு பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. மாவட்டத் தலைவர் நாகசுப்பிரமணி, செயலாளர் முருகன் கூறியதாவது: டி.ஆர்.பி., யின் இந்த உத்தரவு தேவையில்லாத சர்ச்சையை ஏற்படுத்தும். அனைத்து அரசுத் துறைகளில், அடுத்து எந்த பணியிடங்களுக்கு, இதுபோன்று 'செமஸ்டர்' வாரியான சான்றிதழ்கள் கோரப்படுமா என, தெரியவில்லை.கடந்த இரு டி.இ.டி., தேர்வுகளிலும் தேர்ச்சி பெற்றவர்களுக்கு நடத்தப்பட்ட சான்றிதழ் சரிபார்ப்பு போல,இம்முறையும் நடத்த வேண்டும். இவ்வாறு கூறினர்
பணிநிரந்தரம் செய்ய வலியுறுத்தி பகுதிநேர ஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டம் பணிநிரந்தம் செய்ய வலியுறுத்தி பகுதிநேர ஆசிரியர்கள் சென்னையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறையை சமாளிக்க பகுதிநேர ஆசிரியர்கள் 2012-ம் ஆண்டு முதல் தொகுப்பூதியத்தில் பணிநியமனம் செய்யப்படுகின்றனர். அதன்படி தற்போது 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பகுதிநேர ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் பள்ளிகளில் வாரந்தோறும் 3 நாட்கள் பாடம் நடத்துவர். அதற்கு மாதந்தோறும் ரூ.12,500 சம்பளமாக தரப்படுகிறது. இந்நிலையில் பணிநிரந்தரம் செய்யக் கோரி நீண்டகாலமாக அவர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக பகுதி நேர ஆசிரியர்கள் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி சென்னையில் நேற்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஈடுபட்ட நிர்வாகிகள் சிலரை பள்ளிக்கல்வித் துறை உயரதிகாரிகளிடம் பேச போலீஸார் அழைத்துச் சென்றனர். அதில் உடன்பாடு எட்டப்படவில்லை. இதுதொடர்பாக பகுதிநேர ஆசிரியர் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு நிர்வாகி கவுதமன் கூறும்போது, ''கோரிக்கையை நிறைவேற்ற...
Comments
Post a Comment