தமிழ் பாட ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு, 21ம் தேதி, ஆன்லைன் வழியில் நடக்கும் -தினமலர் ஆசிரியர் தேர்வு வாரியம் டி.ஆர்.பி., அறிவித்த, 2,895 முதுகலை ஆசிரியர்களில், 583 தமிழ் ஆசிரியர்கள் மட்டும், இன்று பணி நிய மனம் செய்யப்படுகின்றனர். இதர பாட ஆசி ரியர்கள் நியமனம், தொடர்ந்து இழுபறியாகேவ உள்ளது. கடந்த ஆண்டு ஜூலையில், அரசு மேல்நிலைப் பள்ளிகளில் காலியாகஉள்ள, 2,895 முதுகலை ஆசிரியர் பணியிடங்கைள நிரப்ப, டி.ஆர்.பி., போட்டிதேர்வை நடத்தியது. வழக்கமாக, மூன்று மாதங்களுக்குள், ஒட்டு மொத்த தேர்வுப் பணிகைள முடித்து, இறுதி தேர்வு பட்டியலை வெளியிடும், டி.ஆர்.பி.,க்கு, சமீப காலமாக, நேரம் சரியில்லைலேயாஎன்னேவா, தொடர்ந்து, பல்வேறு வழக்குகளில் சிக்கி, படாதபாடுபடுகிறது. ' முதுகலை தேர்வில், கேள்வி தவறு;சரியான விடை தரவில்லை' என, விதம் விதமாக, பல்வேறு வழக்குகளை, தேர்வர்கள் தொடர்ந்தனர். இதனால், கடும் இழுபறிக்குப் பின், தமிழ் பாடத்திற்குமட்டும் இறுதி தேர்வு பட்டியலை தயாரித்து, பள்ளி கல்வித் துறையிடம், டி.ஆர்.பி., வழங்கியது. ஆனால், பிற பாடங்களுக்கான இறுதி பட்டியல், இன்று வரை தயாராகவில்லை.(this is the news before publishing the 5 subject results by TRB) இன்னும், 30 வழக்குகள், நிலுவையில் இருப்பதாக, டி.ஆர்.பி.,வட்டாரம் தெரிவிக்கிறது. இதனால், ஆங்கிலம், கணிதம், அறிவியல் உள்ளிட்ட, இதர பாடங்களுக் கான வழக்குகள் எப்போது முடியும்;எப்போது இறுதி பட் டியல் தயாராகும் என, டி.ஆர்.பி.,க்கே, தெரியாத நிலைஉள்ளது. இதற்கிடையே, தமிழ் பாடத்திற்கு தேர்வு செய்யப்பட்டுள்ள, 583 பேருக்கு மட்டும் இன்று, பணி நிய மன உத்தரவு வழங்கப்படுகிறது. தலைமை செயலகத்தில், இன்று காலை நடக்கும் விழாவில், ஏழு ஆசிரியர்களுக்கு, முதல்வர் ஜெயலலிதா, பணி நிய மன உத்தரவுகைள வழங்குகிறார். மேலும், 504 பேரை, கருணை அடிப்பைடயில், இள நிலை உதவியாளர்களாக பணி நிய மனம் செய்து, அதற்கான உத்தரவுகைளயும், முதல்வர் வழங்குகிறார். தொடர்ந்து, பல மாவட்டங்களில், கல்வித் துறை சார்பில் கட்டப்பட்டுள்ள, 100 கோடி ரூபாய் மதிப்பிலான கட்டடங்கைள, 'வீடியோ கான்பரன்ஸ்' மூலம், முதல்வர் திறந்து வைக்கிறார். இதுகுறித்து, கல்வித் துறை வட்டாரம் கூறுகையில், 'இதர பாடங்களுக்கான பட்டியல் வந்தால், அவர்கைளயும், பணி நியமனம் செய்வோம். தமிழ் பாட ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு, 21ம் தேதி, ஆன்லைன் வழியில் நடக்கும்' என, தெரிவித்தது.

Comments

Popular posts from this blog