ஏழு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் 26-ல் ஸ்டிரைக்
ஏழு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பிப்ரவரி 25-ல் உள்ளிருப்பு போராட்டமும் 26-ல் வேலைநிறுத்தப் போராட்டமும் நடத்தப் போவதாக தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி அறிவித்துள்ளது.
இதுகுறித்து ஆசிரியர் கூட்டணி பொதுச்செயலாளர் ரெங்கராஜன் கூறியதாவது: மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையாக தமிழக ஆசிரியர்களுக்கும் சம்பளம் வழங்க வேண்டும். தகுதித் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 2 ஆண்டுகளாக பல்வேறு போராட்டங்களை நடத்தியுள்ளோம். ஆனால் தமிழக அரசு எங்கள் கோரிக்கையை கண்டுகொள்ளவில்லை. இதையடுத்து எங்களது மாநில செயற்குழுக் கூட்டத்தை சென்னையில் செவ்வாய்க் கிழமை நடத்தினோம். அதில், 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பிப்ரவரி 25-ம் தேதி உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபடுவது என்றும், 26-ம் தேதி வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தவும் முடிவு செய்துள்ளோம்
பணிநிரந்தரம் செய்ய வலியுறுத்தி பகுதிநேர ஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டம் பணிநிரந்தம் செய்ய வலியுறுத்தி பகுதிநேர ஆசிரியர்கள் சென்னையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறையை சமாளிக்க பகுதிநேர ஆசிரியர்கள் 2012-ம் ஆண்டு முதல் தொகுப்பூதியத்தில் பணிநியமனம் செய்யப்படுகின்றனர். அதன்படி தற்போது 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பகுதிநேர ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் பள்ளிகளில் வாரந்தோறும் 3 நாட்கள் பாடம் நடத்துவர். அதற்கு மாதந்தோறும் ரூ.12,500 சம்பளமாக தரப்படுகிறது. இந்நிலையில் பணிநிரந்தரம் செய்யக் கோரி நீண்டகாலமாக அவர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக பகுதி நேர ஆசிரியர்கள் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி சென்னையில் நேற்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஈடுபட்ட நிர்வாகிகள் சிலரை பள்ளிக்கல்வித் துறை உயரதிகாரிகளிடம் பேச போலீஸார் அழைத்துச் சென்றனர். அதில் உடன்பாடு எட்டப்படவில்லை. இதுதொடர்பாக பகுதிநேர ஆசிரியர் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு நிர்வாகி கவுதமன் கூறும்போது, ''கோரிக்கையை நிறைவேற்ற...
Comments
Post a Comment